மானாட மயிலாட நிகழ்ச்சிக்காக மலேசியா செல்ல இருக்கிறார் நமீதா. மலேசியா மச்சான்களை பார்க்க வர்றேன் எல்லோரும் ரெடியா இருங்க என்று இங்கிருந்தே பறக்கும் முத்தத்தின் மூலம் தூது அனுப்பி வருகிறார். கலைஞர் டிவியில் ஞாயிறுதோறும் இரவு ஒளிபரப்பாகும் மானாட மயிலாட சீசன் 7 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டிகள் மலேசியாவில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியில் பங்கேற்றுக்கும் நடனபோட்டியாளர்கள் தவிர சின்னத்திரை நடனக்கலைஞர்களும் நடனமாட உள்ளனர். பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
வெளிநாடுவாழ் தமிழ் ரசிகர்களின் வரவேற்பினை அடுத்து முதல் முறையாக துபாயில், இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தற்போது "மானாட மயிலாட'' நிகழ்ச்சியின் பாகம் 7-ன் இறுதிப் போட்டி, செப்டம்பர் மாதம் 8-ந்தேதி கோலாலம்பூரில் நடைபெற உள்ளது.
இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு விலை மதிப்பற்ற பல பரிசுகள் காத்திருக்கின்றன. சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுடன், நிகழ்ச்சியின் இயக்குனர் கலா மாஸ்டர், நடிகைகள் குஷ்பு, நமீதா ஆகியோர் பங்கு கொள்கிறார்கள்.