நடிகர் ரஜினி தனது மகள் சௌந்தர்யா அஸ்வின் இயக்கத்தில் கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார். கோச்சடையான் விரைவில் ரிலீஸாகவிருக்கும் சமயத்தில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ’சிவாஜி’ படத்தை 3D முறையில் மாற்றி வெளியிடுகிறது ஏ.வி.எம் நிறுவனம். சிவாஜி படம் ரிலீஸான போது பல ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுத்தது. எப்படியும் இந்த முறையும் சிவாஜி-3D படத்திற்கு
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதை உணர்ந்த ரஜினி இந்த படத்தை தாமதமாகவோ அல்லது முடிந்த அளவிற்கு விரைவிலோ ரிலீஸ் செய்யும்படி கூறியிருக்கிறாராம்.
நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோரின் படங்களும் தீபாவளிக்கு நெருக்கத்தில் ரிலீஸாகவிருப்பதால் தேவையில்லாமல் அந்த படங்களுடன் போட்டிபோட்டு அனைவரது லாபத்தையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும், விஜய் மற்றும் சூர்யாவை ஊக்குவிக்கும் விதத்திலும் தான் ரஜினி இந்த முடிவை எடுத்திருக்கிறார் ரஜினி என்கிறது கோடம்பாக்கம்.