சோனாக்ஷிக்கும் ஜூஹிக்கும் மோதல் முத்திக்கிச்சு...!

பாலிவுட்டின் மாஜி ஹீரோயின் ஜூஹி ஜாவ்லாவும்,  தற்போதைய ஹீரோயின் சோனாக்ஷி  சின்காவும், விரைவில் வெளியாக உள்ள ஒரு இந்தி படத்தில், இணைந்து நடிக்கின்றனர். இருவருக்குமே, இந்த  படத்தில் முக்கிய வேடம். இதன் படப்பிடிப்பு, சமீபத்தில்  பஞ்சாபில் நடந்தது. வெளிப்புறப் படப்பிடிப்புகளில், நடிகர், நடிகைகள் தங்குவதற்கான கேரவன்கள், போதிய அளவில் கிடைக்காததால், ஜூஹி, சோனாக்ஷி ஆகிய இருவருக்கும், ஒரே கேரவனை ஒதுக்கி கொடுத்தனர். ஆரம்பத்தில் இருவருமே,
 சகஜமாக பழகி வந்தனர். ஆனால்,  கேரவனுக்குள், இவர்களுக்குள் என்ன மோதல் நடந்ததோ தெரியவில்லை. திடீரென, "ஜூஹியுடன், ஒரே கேரவனில் என்னால் தங்க முடியாது. எனக்கு தனியாக, ஒரு கேரவன் ஒதுக்குங்கள், என,  தயாரிப்பாளரிடம் சீறினார், சோனாக்ஷி. ஜூஹியும், பதிலுக்கு எகிறவே, என்ன செய்வது என, தெரியாமல், தலையை பிய்த்துக் கொண்ட தயாரிப்பாளர், படப்பிடிப்பை ஒத்தி வைத்து விட்டார்.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget