தமிழில் முண்ணனி ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன்கள்!

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் தமிழை அடிப்படையாக கொண்ட பல அப்ளிக்கேஷன்களை இலவசமாக டவுன்லோட் செய்யலாம். இப்படி தமிழில் உள்ள டாப்-5 அப்ளிக்கேஷன்களை பற்றி இங்கே ஒரு சிறப்பு பார்வை.


ஏ.ஆர்.ரஹ்மான் டியூப் தமிழ்:
இசை புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையை தொடர்ந்து கேட்டு கொண்டிருக்க பலருக்கு விருப்பம் இருக்கும். ஏ.ஆர்.ரஹ்மான் டியூப் தமிழ் என்ற அப்ளிக்கேஷன் 

மூலம், ரஹ்மானின் அதிர வைக்கும் இசையினை கேட்டு கொண்டே இருக்கலாம். இந்த ஃப்ரீ அப்ளிக்கேஷனை ஆன்ட்ராய்டு மார்கெட்டில் டவுன்லோட் செய்யலாம்.


யோசி அப்ளிக்கேஷன்:
அட! யோசி என்ற அழகான அப்ளிக்கேஷனும் ஆன்ட்ராய்டு மார்கெட்டில் உள்ளது. தமிழ் பழமொழிகள், முதுமொழிகள் மற்றும் விடுகதை தொகுப்புகளை இந்த ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன் மக்கள் மத்தியில் எடுத்து செல்கிறது. இது சிறுவர்களின் ஆர்வத்தினை அதிகப்படுத்துவதோடு, பெரியவர்களையும் குழந்தை பருவத்திற்கு கூட்டி செல்லும்.



யூடியூப் தமிழ் மூவீஸ்:
யூடியூபில் உள்ள வீடியோக்கள் அனைவராலும் அதிகம் பார்க்கப்படுகிறது. அதிலும் சினிமா சம்மந்தமான யூடியூப் வீடியோக்களை பார்க்க வேண்டும் என்றால், யூடியூப் தமிழ் மூவீஸ் என்ற அப்ளிக்கேஷனை ஃப்ரீயாக டவுன்லோட் செய்யலாம். இந்த அப்ளிக்கேஷன் மூலம் தெளிவாக தமிழ் பட வீடியோக்களையும், ட்ரெய்லர்களையும், குறும்படங்களின் வீடியோக்களையும் எளிதாக பார்க்கலாம்.


இங்கிலிஷ் டூ தமிழ் டிக்ஷ்னரி:
நிறைய வார்த்தைகளுக்கு தமிழில் அர்த்தங்கள் தேவைப்படுகிறது. இப்படி அர்த்தங்கள் கண்டு பிடிக்க அகராதி தேவை என்று நினைத்தால், ஆங்கிலத்தில் வார்த்தைக்கு அர்த்தம் சொல்லி கொடுக்கும் இங்கிலிஷ் டூ தமிழ் டிக்ஷ்னரி அப்ளிக்கேஷனை எளிதாக டவுன்லோட் செய்யலாம். இந்த அப்ளிக்கேஷன் இலவசமாக டவுன்லோட் செய்ய கூடியது தான்.


கூகுள் ட்ரேன்ஸ்லேட்:
எந்த ஒரு மொழியில் உள்ள வாசகத்தினையும் கூகுள் ட்ரேன்ஸ்லேட் மூலம் மொழி பெயர்க்கலாம். இந்த கூகுள் ட்ரேன்ஸ்லேட் வசதியினை பிரவுசிங் வசதியில் பெறுவதைவிட, இதை அப்ளிக்கேஸனாக கையிலிருக்கும் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் டவுன்லோட் செய்து வைத்து கொண்டால், வேண்டிய பொழுது எளிதாக பயன்படுத்தி கொள்ளலாம். இந்த கூகுள் ட்ரேன்ஸிலேட் அப்ளிக்கேஷன் வசதியினை இலவசமாக டவுன்லோட் செய்யலாம். இதில் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் 64 மொழிகளை டைப் செய்தும் மொழிபெயர்க்கலாம், 17 மொழிகள் குரல்பதிவிலும் மொழிபெயர்க்கலாம்.



பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget