இன்று வெள்ளிக்கிழமை இரண்டு படங்கள் மட்டுமே ரிலீசாகின்றன, தமிழில். இந்த இரண்டில் மிக முக்கியமான படைப்பாக பார்க்கப்படுகிறது சாட்டை. இயக்குநர் பிரபு சாலமன் முதல் முறையாக ஷாலோம் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் புதிய நிறுவனம் தொடங்கி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அவரது உதவியாளர் அன்பழகன் என்பவர் இயக்கியுள்ளார். ஒரு அரசுப் பள்ளியை மையப்படுத்தி
எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் சமுத்திரக் கனி கதையின் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படம் திரையுலகம் மற்றும் பத்திரிகையுலகினரால் பெரிதும் பாராட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு படம் சாருலதா.
சிறையிலிருந்து வந்து புதிய அவதாரம் எடுத்துள்ள (எத்தனை நாளைக்கோ!!) சக்சேனா அன்ட் கோ வெளியிடும் படம்.
இந்த இரு தமிழ்ப் படங்களைத் தவிர, கரீனா கபூர் நடித்து மதுர் பண்டார்கர் இயக்கியுள்ள ஹீரோயின் வெளியாகிறது. 19 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.
ட்ரெட் எனும் 3டி ஆங்கிலப் படமும் இன்று வெளியாகிறது.
இவை தவிர, ஒரு மலையாளப்படம் (ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா), தெலுங்குப் படமும் (டான் சீனு) வெளியாகின்றன.