மதில் மேல் பூனை படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள அடர்ந்த காடுகளில் நடந்தபோது ராட்சத கொசுக்கடி, அட்டைப்பூச்சி கடிகளில் அவதிப்பட்ட ஹீரோயின் விபாவிற்கு அத்தனை துயரத்திலும் ஆறுதலாக இருந்தது ஹீரோ விஜய் வசந்தின் ஏ ஜோக்குகள் தானாம்! இதை நாயகி விபாவே சமீபத்தில் மதில் மேல் பூனை ஆடியோ வெளியீட்டை தொடர்ந்து நடந்த பிரஸ் மீட்டில் மகிழ்ச்சியாக வெளிப்படுத்தியதுடன், அப்படி ஜோக் அடித்த விஜய் வசந்த் ரொம்ப திறமைசாலி என்றும்,
எதிர்காலத்தில் சூப்பர்ஸ்டாராகும் அறிகுறிகள் இருப்பதாகவும் அடித்து கூறினார்.
விபாவைத் தொடர்ந்து பேசவந்த விஜய் வசந்த், தமிழ்நாட்டுக்கு ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான். அது ரஜினி மட்டும்தான். நான் எல்லாம் அவரது ரசிகன் மட்டும்தான் என்று தன்னடக்கத்துடன் கூறியதுடன் விபாவிடம் கேரள காடுகளில் ஏ ஜோக்குகள் ஏதுவும் அடிக்கவில்லை... ஏ கிளாஸ் நல்ல ஜோக்குகள் தான் அடித்தேன் என்று கூறிச் சென்றார்.
அதெல்லாம் சரி விஜய், "மதில் மேல் பூனை" தாவுவதற்கு தங்களது தந்தை வசந்த் அண்ட் கோ வசந்திடம் சொல்லி தயாரிப்பாளருக்கு உதவலாமே...? என்ற கேள்விக்கு விஜய் வசந்த் கடைசி வரை பதில் அளிக்கவே இல்லை என்பது செம காமெடி!
விஜய், "மதில் மேல் பூனை" அல்ல "பனங்காட்டு நரி...?!"