இளைய தளபதியின் அடுத்த படம் - புதிய தகவல்கள்


விஜய் நடிக்கும் புதிய படத்தை ஏ.எல்.விஜய் - தெய்வத்திருமகள், தாண்டவம் படங்களின் இயக்குனர் - இயக்குகிறார். அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டிருக்கும் இந்தப் படம் குறித்து இரு அதிகாரபூர்வமற்ற தகவல்கள் உலவுகின்றன. ஒன்று, படத்துக்கு தலைவன் என்று பெயர் வைத்திருக் கிறார்கள். இதனை இயக்குனர் விஜய்யே மறுத்துவிட்டார்.
இரண்டு, படத்தின் ஹீரோயின் சமந்தா. தோல் அலர்‌ஜி காரணமாக மணிரத்னம், ஷங்கர் படங்களிலிருந்து விலகியவர் சமீபத்தில்தான் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவரது அலர்‌ஜி பூரணமாக குணமாகிவிட்டதாக‌த் தெ‌ரிகிறது. இதனைத் தொடர்ந்துதான் விஜய் படத்தில் சமந்தா என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.

இன்னும் பெய‌ரிடப்படாத இந்தப் படத்தின் போட்டோ ஷூட் வரும் 28ஆம் தேதி நடக்கயிருக்கிறது. ஒருவகையில் இந்த புராஜெக்ட் 28 அன்று டேக் ஆஃப் ஆகிறது என்று சொல்லலாம். அன்று ஹீரோயின் மற்றும் படத்தலைப்பு உறுதி செய்யப்படலாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget