கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்


4. சாட்டை
எம்.அன்பழகன் இயக்கத்தில் வெளிவந்த சாட்டை கமர்ஷியலாக சுமாரான வெற்றியை - அதை வெற்றி என்று சொல்லலாமா? - பெற்றிருக்கிறது. இரண்டு வாரங்கள் முடிவில் 36 லட்சங்களை சென்னையில் இப்படம் வசூலித்துள்ளது.
சென்ற வார இறுதியில் இதன் வசூல் 7.58 லட்சங்கள். வார நாட்களில் வசூல் 7.6 லட்சங்கள்.

3. சாருலதா
ஒட்டிப் பிறந்த இரட்டை சகோத‌ரிகள் சாட்டைக்கு பரவாயில்லை. இரண்டு வாரங்களில் 64 லட்சங்களை வசூலித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 79 ஆயிரங்கள் மட்டுமே. அதேநேரம் வார நாட்களில் 21.8 லட்சங்களை வசூலித்து ஆச்ச‌ரியப்படுத்தியிருக்கிறது.

2. சுந்தரபாண்டியன்
சுந்தர பாண்டியன் மூன்று வாங்களை நிறைவு செய்திருக்கிறது. வசூல் 4.9 கோடிகள். பில்லா 2-வுக்கு இது எவ்வளவோ மேல். வார இறுதியில் 47.36 லட்சங்களை வசூலித்த படம் வார நாட்களில் 65.31 லட்சங்களை தனதாக்கியுள்ளது.

1. தாண்டவம்
முதலிடத்தில் தாண்டவம். சென்ற வாரம் வெளியான இந்தப் படம் வெளியான மூன்றே தினங்களில் 1.92 கோடி வசூலித்துள்ளது. பில்லா 2 ஓபனிங்குடன் ஒப்பிடுகையில் இது குறைவு. விக்ரமின் கடந்த 3 படங்களுடன் ஒப்பிடுகையில் இது மிக அதிகம். ரசிகர்களை பரவலாக கவர்ந்திருப்பதால் வசூல் 5 கோடியை தாண்டும் என நம்பப்படுகிறது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget