கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா இரட்டையராக நடித்த படம் மாற்றான். இப்படத்தில் சூர்யா இரட்டையராக நடித்ததை படம் முடியும் தருவாயில் வரை சஸ்பென்சாக வைத்திருந்த கே.வி.ஆனந்த், பின்னர் முதலில் தமிழ் மீடியாக்களுக்கு சொல்லாமல், ஆந்திராவில் பிரஸ்மீட் வைதது அங்குள்ள மீடியாக்களுக்குத்தான் சொன்னார். அதோடு, இப்படம் இதுவரை சூர்யா படங்கள் வசூலித்ததைவிட பெரிய அளவில் வசூல் சாதனை புரியும்
என்றெல்லாம் பில்டப் கொடுத்தார்.
ஆனால் இப்போது படம் தமிழ், தெலுங்கு இரண்டு ஏரியா ரசிகர்களாலும் புறக்கணிக்கப்பட்டு விட்டது. ஆனால், குப்புற விழுந்து மீசையில் மண் ஒட்டியபோதும் படம் ஹிட் என்றபடியே காலறை தூக்கி விட்டபடிதான் நடிக்கிறார்கள். இந்த சமயத்தில் சூர்யாவை சந்தித்த சில அபிமானிகள், மாற்றான் படத்தின் அடுத்த பார்ட் வருமா? என்றொரு கேள்வியை எதேச்சையாக கேட்க, அதிர்ச்சியடைந்தவர், சமாளித்துக்கொண்டு, இது எனக்கான கேள்வி இல்லை. சம்பந்தப்பட்ட டைரக்டர்கிட்டதான் கேட்கனும் என்று சொலலி எஸ்கேப் ஆகி விட்டாராம்.