ரூ.2.5 கோடி சம்பளம் தருகிறேன் என்று சொல்லியும் டர்ட்டி பிக்சர் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் என்ற கேள்விக்கு நயன்தாரா பதில் அளித்திருக்கிறார். கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் இந்தியில் தயாரானது. இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்தார். மிலன் ருத்ரியா இயக்கினார். ஏக்தா கபூர் தயாரித்தார். இப்படம் கடந்த டிசம்பரில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. ரூ. 18 கோடி செலவில்
எடுக்கப்பட்டு ரூ. 117 கோடி வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது. இதில் நடித்ததற்காக வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.
டர்ட்டி பிக்சர் படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்கான நடிகர், நடிகை தேர்வு நடந்து வருகிறது, சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேசப்பட்டதாகவும், அவருக்கு ரூ. 2.5 கோடி சம்பளம் தர தயாரிப்பாளர் ஏக்தா கபூர் முன் வந்ததாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால் நயன்தாரா இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டார்.
இதுமொழிகளுக்கும் சேர்த்து ரூ.2.5 கோடி சம்பளம் கிடைக்கும் என்கிற நிலையில் படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்த செய்தி கோலிவுட்டில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி நயன்தாரா அளித்துள்ள பேட்டியன்றில், டர்ட்டி பிக்சர் படத்தில் கவர்ச்சி காட்சிகள் உள்ளன. உடை குறைப்பு மற்றும் நெருக்கமான காதல் சீன்களும் இருக்கிறது. எனவேதான் அந்த நடிக்க மறுத்து விட்டேன், என்று கூறியிருக்கிறார்.
நம்புற மாதிரியா இருக்கு?