சுவாதகம் என்ற பெயரில் ஆந்திராவில் வெளியான படம், "அமெரிக்கா டூ அமஞ்சிக்கரை என்ற பெயரில், தமிழில், "டப்பாகி உள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி, நியூயார்க், அட்லாண்டிக் போன்ற பெருநகரங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தை, தசரதன் இயக்கியுள்ளார். அர்ஜுன், அனுஷ்கா, பூமிகா ஆகியோர் நடித்துள்ளனர். பிசினஸ் மேனான அர்ஜுன் அமெரிக்கா செல்லும் போது, வர்த்தக வழிகாட்டியாக வரும் அனுஷ்காவை சந்திக்கிறாராம்.
அப்போது அவர்களுக்கிடையே ஏற்படும் நட்பு, பின் காதலாக மலர, அனுஷ்காவின் இதயத்தை இந்தியாவுக்கு கொய்து வந்து விடுகிறாராம் அர்ஜுன். இதன் பின், தொடரும் அழகான காதல் கதையில், அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக வந்து அசத்துகிறாராம் அனுஷ்கா.