Ong Bak 2 (2008) சினிமா விமர்சனம்

Bruce Lee, Jackie Chan, Jet Li எல்லாரும் Martial Arts படங்களில் தங்களிற்கென ஒரு முத்திரை பதித்துச் சென்றவர்கள். அதில் ஒருவர் காலமாகிவிட, மற்ற இருவரும் முதுமை எய்திவிட, புதிதாக தாய்லாந்திலிருந்து வந்து இறங்கியிருக்கின்றார் Tony Jaa. தனக்கென்று சொல்லி Muay Thai என்று சொல்லப் படும் புதுவித சண்டைக் கலையை திரைக்கு அறிமுகப் படுத்தியிருக்கின்றார். முதலாவது Ong Bak (2003) படத்தோடு ஆக்ஸன் பட ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருக்கின்றார்.


இந்த இரண்டாம் பாகம், 2003′ஆம் ஆண்டு படத்தின் தொடர்ச்சியல்ல. சற்று சம்பந்தமில்லாது தோன்றினாலும், இதுவும், இனிவரவிருக்கும் Ong Bak 3′உம் இணைந்து, முதலாவது Ong Bak படத்தின் முன்படமாக (prequel) அமையுமாம். படம் முற்று முழுதாக ஆக்ஸன் படம். எனவே, அங்கே ஒரு நூலளவுதான் கதையிருக்கின்றது. சரித்திர காலத்தில் நடப்பதாக சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்தப் படம், கூட இருந்து குழிபறிப்பவர்களால் அநாதை ஆகின்ற ஒரு அரச தளபதியின் மகனின் வாழ்க்கையை ஒட்டிப்போகின்றது. படம் தாய்லாந்து மொழியில்தான் இருக்கின்றது. எனவே subtitiles’ஐத் தேடிப்பிடித்தல் அவசியம். என்றாலும் அது பெரிய பாதகம் இல்லை ஏனென்றால், படத்தில் இருக்கும் கதை வசனத்தை விரல் விட்டு எண்ணிவிடலாம். மற்றப்படி ஆக்ஸன், ஆக்ஸன், ஆக்ஸன்தான்! என்றாலும் திகட்டாத விதத்தில் ஒளிப்பதிவும், படத்தொகுப்பும். முதலாவது Ong Bak, இதிலும் விட சற்றே சிறந்தது என்றாலும், ஆக்ஸன் ரசிகர்கள் சந்தோசமாக பார்க்கலாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget