ஸ்கைபால் ஹாலிவுட் திரை விமர்சனம்


ஜேம்ஸ்பாண்ட் வேலை பார்க்கும் உளவுத்துறை அமைப்பில் மேலதியாக வேலைபார்க்கிறார் ஒரு வயதான பெண்மணி. அவரைப் போட்டுத் தள்ளவேண்டும் என்று அலைகிறது வில்லன் கோஸ்டி.
அவர்களிடம் இருந்து அந்த பெண்மணியை ஜேம்ஸ்பாண்ட் காப்பற்றினாரா? என்பதை பரபரப்பான திரைக்கதையுடன் சொல்லி முடிக்கிறது SKYFALL.

படம் ஓப்பனிங்கிலேயே ஜேம்ஸ்பாண்ட் வரும் காட்சியில் மெல்ல வாசல் வெளிச்சத்தில் நிழல் தெரிவதும் மெல்ல மெல்ல உருவம் தெரிவதுமான காட்சியில் இருந்தே ஜேம்ஸ்பாண்டின் அதிரடியான ஆட்டம் ஆரம்பித்துவிடுகிறது. அடுத்து கார் சேஸிங் காட்சி, வில்லன் ஒருவனைப் பிடிக்க ரெயிலிலேயே புல்டோசர் பயன்படுத்துவது எல்லாம் செம கலக்கலான சீன்கள்.

ஜேம்ஸ்பாண்டுடன் வேலை பார்க்கும் பெண் சுடும் போது ஜேம்ஸ்பாண்ட் மீது குண்டு பாய்ந்து அவர் பொத்தென ரெயிலில் இருந்து ஆற்றுக்குள் விழும் காட்சியில் படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனையும் சீட்டின் நுனிக்கே வரவைத்துவிடுகிறார் இயக்குநர். ஜேம்ஸ்பாண்ட் சுடப்பட்டு விழுந்ததும் படத்தில் வரும் சில விநாடி அமைதியில் தியேட்டரும் ஜேம்ஸ்பாண்டுக்காக உச் கொட்டுகிறது…

தேளை கையில் வைத்துக் கொண்டு குடிக்கும் காட்சியில் நமக்கும் கொஞ்சம் திக் திக் என்றுதான் இருக்கிறது. ரயில் வரும் பாதையில் வெடி வெடிப்பதால் உருவான ஓட்டை வழியாக ரயில் பாதாளம் உள்ளே வந்து விழும் காட்சி, ரயில் மீது ஓடி வந்து ஜேம்ஸ்பாண்ட் ஏறும் காட்சிகள் பிரமிக்க வைக்கும் காட்சிகள்.

கேரக்டர்கள் பேசும் இடங்களில் இசை இல்லாமல் இருப்பது கூட எவ்வளவு அழகாக இருக்கிறது. ஜேம்ஸ்பாண்ட் SKYFALL செல்ல காரில் வரும் போது வரும் இசை செம சூப்பர்…

ஜேம்ஸ்பாண்டாக நடித்திருக்கும் டேனியல் கிரக் செமயாக நம்மை இம்ப்ரஸ் பண்ணுகிறார். ஜேம்ஸ்பாண்ட் வரும் காட்சிகளில் எல்லாம் ஒலிக்கும் ரசிகர்களின் கைத்தட்டல் கடைசியில் ஜேம்ஸ்பாண்ட் லோகோ போடும் வரை கொஞ்சமும் குறையாமல் இருக்கிறது.

சென்ற வாரத்திலேயே பல நாடுகளிலும் ரிலீசான ஜேம்ஸ்பாண்ட் 007 SKYFALL இதுவரை வெளியான ஜேம்ஸ்பாண்ட் படங்களின் வசூலை முறியடித்துவிட்டது. இந்தியாவில் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது SKYFALL. இங்கும் இதே சாதனையை நிகழ்த்தும் என்பதில் சந்தேகமே இல்லை.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget