தமிழில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் அஞ்சலி தற்போது தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ‘சீத்தம்மா வாகிட்லோ ஸ்ரீமல்லே சேட்டு’ என்ற படத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாகவும், ‘பலுப்பு’ என்ற படத்தில் ரவிதேஜாவுக்கு ஜோடியாகவும் நடிக்கிறார். 2006-ம் ஆண்டு முதன்முதலில் சினிமாவுக்கு தெலுங்கில்தான் அறிமுகமானார் அஞ்சலி. அப்போது அவர் நடித்த இரண்டு படங்களும் பெரும் தோல்வியைத் தழுவின. பின்னர் 2007-ல் ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி தற்போது பிரபல நடிகையாகியுள்ளார்.
தற்போது மீண்டும் தெலுங்கு பக்கம் போகியுள்ள அஞ்சலிக்கு தெலுங்கு திரையுலகம் கைகொடுக்குமா? என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அஞ்சலி தமிழில் ‘சேட்டை’, ‘வத்திக்குச்சி’, ‘மதகஜராஜா’, ‘ஒன்பதுல குரு’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ‘சிங்கம் 2’ படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு நடனமாடியுள்ளார்.