கண்ணா லட்டு தின்ன ஆசையா - பவர்ஸ்டார்

காமெடி நடிகர் சந்தானம் கதாநாயகராவும், தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைக்கும் படம் "கண்ணா லட்டு தின்ன ஆசையா". இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு வீழா, சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்கில் வெகு விமரிசையாக நடந்தது. படத்திலும் இவ்விழாவிலும் படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஒரு நாயராக நடித்து இருக்கும் பவர்ஸ்டார் டாக்டர்
சீனிவாசனை போட்டு தாக்கு தாக்கு என்று தாக்கினார் சந்தானம். விழாவில் பேசிய சந்தானம், இப்படத்தை பற்றி சந்தானத்துடன் கூறியபோது அவர் கேட்ட முதல்கேள்வியே எப்போது படத்துக்கான விழா நடைபெறும் என்று தான். ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக அவர் என்னிடம், எனக்கு 50 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள், குறைந்தது 5000 இன்விடேஷனாவது வேண்டும் என்று கேட்டார். உடனே நான் மொத்தமே 500 இன்விடேஷன் தான் அடித்துள்ளேன் என்று சொல்லி அவருக்கு ஒரு 50 இன்விடேஷன்களை கொடுத்தேன். அவர் ஏன் அப்படி கேட்டார் என்று இப்போது தான் புரிந்தது. இங்கு விழாவுக்கு பவர் ஸ்டார் தன்னுடைய ரசிகர்களை லாரியில் வரவழைத்து அழைத்து வந்துள்ளார். அவருக்காக விழாவுக்கு வந்த அவரது ரசிகர்களுக்கு எனது நன்‌றியை தெரிவித்து கொள்கிறேன் என்று போட்டு தாக்கினார்.  

இவ்விழாவில் பேசிய பவர்ஸ்டாரும், சந்தானத்திற்கு சற்றும் சளைத்தவர் இல்லாவதர் மாதிரி சந்தானம் முதல் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் வரை தனது ரசிகர்கள் என்று சொல்லி கலாய்த்தது அரங்கத்தையே அதிர செய்தது. ஆனால் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆடியோ சிடியை வெளியிட்ட ஷங்கர், பவர்ஸ்டாரின் ‌பேச்சால் அப்செட்டாகி இருப்பார் போலும்...தனது ஐ படத்தில் பவர்ஸ்டாருக்கும் ஒரு பாத்திரம் கொடுத்து, தன்னையும் பவரின் ரசிகர் என்று சொல்லி பவர்ஸ்டாரின் புகைப்படமும் எடுத்துக் கொண்ட ஷங்கர் (தகவல் உபயம் பவர்ஸ்டார்) பவரின் இதுமாதிரி பேச்சால் அவரைப்பற்றி மேடையில் மறந்தும் மூச்சுவிடவில்லை ஷங்கர். இதில் வருத்தத்திற்குள்ளான பவரின் இரண்டு லாரி ரசிகர்கள் கூட்டம், பவர்ஸ்டாரை பற்றி பவர்ஸ்டாரை பற்றி பேசு... என்று கூச்சலிட்டும், அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் தனது இருக்கையில் போய் அமர்ந்தார் ஷங்கர்.

பவரின் காமெடி பேச்சு ஷங்கரின் "ஐ"-யிலிருந்து அவரை கழட்டி விடாது இருந்தால் சரி! 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget