கோச்சடையான் படத்தில் ரஜினி ஜோடியாக நடித்துள்ளார் தீபிகா படுகோனே. இதன் படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாக உள்ளது. ரஜினியுடன் நடித்த அனுபவங்கள் பற்றி தீபிகா படுகோனே சொல்கிறார். ரஜினியை ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக பார்க்கிறார்கள். வெவ்வேறு வகையில் பாராட்டுகிறார்கள். நான் ‘கோச்சடையான்’ படத்தில் அவருடன் நடித்தேன். படப்பிடிப்பு முடிந்துள்ளது. அவருடன் பணியாற்றிய வகையில் அவரைப் பற்றி ஒரு உண்மையை என்னால் சொல்ல முடியும்.
ரஜினி அன்பானவர். அடக்கமானவர். நேரில் சந்திக்கும் போதுதான் அவரைப்பற்றி புரிந்து கொள்ள முடியும். தொழிலை அர்பணிப்பு உணர்வோடு செய்வார். ஆத்மார்த்தமாகவும் செய்வார். அவரைப்போல் ஒரு மனிதரை நான் பார்க்கவே இல்லை.
ரஜினியுடன் நடித்தது என் அதிர்ஷ்டம். தொடர்ந்து நல்ல படங்களில் நடித்துள்ளேன். நான் நினைத்ததை அடைந்து விட்டேன். இதற்காக நிறைய கஷ்டப்பட்டு உள்ளேன். சந்தோஷமாக இருக்கிறது.
இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.