நண்பர்கள் கவனத்திற்கு சினிமா விமர்சனம்


காலையிலேயே வீட்டிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பும் ஒரு பெரியவர், இரவு வரைக்கும் வீடு திரும்பாததால் அப்பாவைத் தேடிக் கொண்டு கிளம்புகிறான் மகன். சென்னை முழுக்க தேடிவிட்ட அவன் அடுத்து ஊருக்கு போனாலும் போயிருப்பார் அங்கு போய் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் ஊருக்கு கிளம்பிப் போகிறான். அவன் ஊருக்கு கிளம்ப இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு நடந்த பெரியவரின் இளவயது வாழ்க்கைக்கு ப்ளாஷ்பேக் நகருகிறது.
கோழி கூவுது படத்தைத் தொடர்ந்து முழுக்க முழுக்க கிராமத்திலேயே எடுக்கப்பட்டிருக்கும் படம் நண்பர்களின் கவனத்திற்கு. கிராமத்தில் இருக்கும் தோப்புக்காரர், டீன் ஏஜ் ஹீரோ, ஹீரோயின், ஹீரோவின் அப்பா, ரொம்பவே கண்டிப்பான தலைமையாசிரியர் என அனைவரின் அசல் முகங்களை பதிவு செய்கிறது படம்.

ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார் புதுமுகம் சஞ்சய். இவரது முகம் பார்ப்பதற்கு கொஞ்சம் அப்பாவி போல் இருப்பதால் கேரக்டருக்கு அழகாகவே மேட்ச் ஆகியிருக்கிறார். கூட படிக்கும் பையனிடம் தம்பி என்று உரிமையோடு பழகுவதும் அவனுக்காக ஒவ்வொன்றாக செய்வதுமான காட்சிகளில் அசத்துகிறார் சஞ்சய். அந்த பையனால் ஹீரோவுக்கு நேருகிற முடிவு பரிதாபம்.

ஹீரோயினாக வருகிறார் மனிஷா ஜித். ஏழாம் கிளாஸ் படிக்கிற பொண்ணு மாதிரி இருக்கிறார். பள்ளி பருவத்தின் காட்சிகளுக்கு நன்றாகவே இருக்கிறார் மனிஷா. ஆனால் இவருக்கு திருமணமானது போன்று வரும் காட்சியில் கூட ரொம்பவே சின்னப் பெண்ணாகவே தெரிகிறார். பாவாடை தாவணியில் மனிஷா வருகிற ஒவ்வொரு காட்சியும் அழகோ அழகு.

ஹீரோவுடன் கூடவே வருகிற தலைமையாசிரியர் மகன் பார்ப்பதற்கு அநியாயத்துக்கு அப்பாவியாக இருந்தாலும் இவர் கடைசியில் ஹீரோவுக்கு எதிராக செய்கிறார் வில்லங்கத்தனமான வேலையை. ரொம்பவே கண்டிப்பான தலைமையாசிரியராக வருகிறார் ராஜ்கபூர். இவரது குரலும் செய்கையும் அந்த காலத்து ஆசிரியர்களை நினைவுக்கு கொண்டு வருகிறது.

ஹீரோவின் அப்பாவாக வருகிறார் தலைவாசல் விஜய். இளநீர் வியாபாரம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிற கேரக்டர். படிக்கிற காலத்தில் மகனை கரித்துக் கொண்டுவதும் பின்பு மகன் சம்பாதிக்கிற காலத்தில் அவன் வாங்கித் தந்த வேஷடி, சட்டை, செருப்பை போட்டு நடந்து பார்க்கிற காட்சியில் மனிதர் நடிப்பை கொட்டியிருக்கிறார்.

ஹீரோவின் நண்பர்களாக வரும் ஆகியோர் காமெடி கலாட்டா செய்கின்றனர். அதுவும் அவர்கள் மதினி மதினி என்று ஒரு பெண்ணை ஓட்டோ ஓட்டு என்று ஓட்டுவது ‘காம’டி.

இசை பிரம்மா. இரண்டு பாடல்கள் ரசிக்க வைக்கின்ற வேளையில் இரண்டு பாடல்கள் குத்தாட்டம் போட வைக்கிற ரகத்தில் இருக்கின்றன.

கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஜெயகுமார். காதல், காமெடி கலந்த கிராமத்து கதையாக இருக்கிறது இந்த நண்பர்கள் கவனத்திற்கு. நண்பர்களுக்கு உதவி செய்யலாம்… ஆனால் நண்பர்கள் போர்வையில் இருக்கும் பச்சோந்திகளுக்கு உதவி செய்யுறதுனால என்னென்ன விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை சொல்லியிருக்கிறார் ஜெயக்குமார்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget