இப்படி ஒரு திரில்லர் படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. ஒரு பாடலுக்கு சுவிஸ், சண்டைக்கு மலேசியா என்று பயணம் போகும் நம்மூர் இயக்குனர்கள் கண்டிப்பாய் பார்க்கவேண்டிய படம். படத்தின் முதல் 5 நிமிட காட்சி தவிர மற்ற அனைத்தும் ஒரு தெரு மற்றும் அந்த தெருவில் உள்ள போன் பூத்தை சுற்றியே படமாக்கப்பட்டிருக்கும். கதை வலுவாக இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதற்கு இந்தப்படம் ஒரு சிறந்த உதாரணம். படத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை பரபரப்பிற்கு சிறிதும் பஞ்சம் இருக்காது.
Stu Shepard போன் பூத்திலிருந்து தன் காதலிக்கு போன் செய்து பேசிவிட்டு வெளிய வரும் பொது, அந்த பப்ளிக் போனில் ரிங் வரும், Stu அந்த ரிசிவரைரை எடுத்து யார் என்று கேட்க, மறுமுனையில், இந்த ரிசிவரை நீ கிழே வைக்கக்கூடாது மீறி வைத்தால் உன்னை கொன்று விடுவேன் என்று ஒரு குரல் மிரட்டும். டப்பிங் கொடுத்த இந்த குரலுக்கு சொந்தக்காரரை நிச்சயம் பாராட்டியாக வேண்டும், காரணம் அப்படி ஒரு உருட்டல் மிரட்டலான குரல். முதலில் Stu அலட்சியப்படுத்தினாலும் போகப்போக சற்றே சுதாரித்துக் கொள்வார்.
Laser pointing gun வைத்துக்கொண்டு Stuவை அவன் குறிபார்த்துக்கொண்டே போனில் மிரட்டுவது, எதுவும் செய்ய இயலாமல் Stu தடுமாறுவது, சுற்றிலும் போலீஸ் பொதுமக்கள், டி.வி ரிப்போட்டர் என ஏதோ N.D.T.Vயில் ஒரு பரபரப்பான சம்பவத்தை லைவ் டெலிகாஸ்ட் செய்வதை பார்ப்பதுபோல் இருக்கும்.க்ளைமாக்ஸ் மட்டும் விறுவிறுப்பாக பார்த்து பழக்கப்பட்ட நமக்கு, இந்த படம் முழுவதும் அப்படி இருந்தது ரொம்பவே ரசிக்க வைத்தது. ஹாலிவூட் நடிகர்களின் நடிப்பில் எனக்கு அவ்வளவாக நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. ஆனால், சமீபகாலமாக நான் பார்த்த சில படங்கள் அந்த நினைப்பை சுக்கு நூறாக உடைத்திருக்கிறது. இந்த மன மாற்றத்திற்கு நான் தொடர்ந்து பார்த்த Morgan Freeman, Brad Pitt, DiCaprio, Colin Farrell, Denzel Washington, Tom Hanks போன்றவர்களுடைய படங்கள் தான் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். யாரேனும் ஒரு நல்ல விறு விறுப்பான படம் பார்க்கவேண்டும் என்று சொன்னால் தாராளமாக இந்த படத்தை பரிந்துரைக்கலாம்.