வாயுத் தொல்லையை எளிதாக விரட்டுவது எப்படி?


இன்றைய காலத்தில் நிறைய மக்கள் வாயுப் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் உண்ணும் உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் தான். ஏனெனில் உணவை உண்ணும் போது எவ்வாறு உண்ண வேண்டும், எந்த உணவை உண்ண வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்று எதுவுமே தெரியாமல், நடந்து கொள்கின்றனர். இதனால் பல இடங்களில் வலிகள் ஏற்படுகின்றன. சொல்லப்போனால், வாயுத் தொல்லை
ஒரு பெரிய பிரச்சனை இல்லை தான் என்றாலும், சிலர் இவற்றிற்கு அளவு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் வயிற்று உப்புசம், வயிற்று வலி, ஏப்பம் போன்றவை அடிக்கடி ஏற்பட்டால், அது உடலில் அதிக அளவில் வாயு உள்ளது என்பதற்கான அறிகுறிகள் ஆகும். சிலர் எப்போது பார்த்தாலும், ஏப்பம் விட்டுக் கொண்டே இருப்பார்கள். இந்த மாதிரியான நிலை வந்தால், உடனே அதற்கான காரணத்தை அறிந்து, அவற்றை தவிர்க்க முயற்சிக்க வேண்டும். இப்போது அந்த செயல்கள் என்ன, எவற்றை தவிர்க்க வேண்டும் என்பதை பட்டியலிட்டுள்ளோம், அதைப் படித்து தெரிந்து கொண்டு, பின்பற்றி, வாயுத் தொல்லை ஏற்படாமல் தடுக்கலாமே!!!

உண்ணும் முறை : உணவை உண்ணும் போது அவசரமாக சாப்பிடாமல், மெதுவாக நன்கு மென்று சாப்பிட வேண்டும். இல்லையெனில் உணவுப் பொருட்களை அவசரமாக சாப்பிடும் போது, உணவுப் பொருட்கள் இரைப்பையில் காற்றையும் உள்ளே தள்ளிக் கொண்டு சென்றுவிடும். பின் வாயுத் தொல்லை ஏற்படும். ஆகவே மெதுவாக சாப்பிட்டால், உமிழ்நீர் சுரப்பிகள் உணவுப் பொருட்களை கரைப்பதோடு, மென்மையாக்கி, எளிதில் செரிமானமடைய வைக்கிறது. மேலும் உடலில் வாயுத் தொல்லையும் ஏற்படாமல் இருக்கும்.

சோடா மற்றும் ஜூஸ்: நாம் சோடா சாப்பிட்டால், வாயுத் தொல்லை நீங்கி, வயிற்று வலி சரியாகும் என்று நினைக்கின்றோம். ஆனால் உண்மையில் கார்போனேட்டட் பானங்கள் அனைத்தும் வாயுத் தொல்லை ஏற்படும். ஏனெனில் அதிலிருந்து வரும் சிறு சிறு முட்டைகள் மற்றும் ஜூஸில் இருக்கும் சர்க்கரை வாயுப் பிரச்சனையை உண்டாக்கும். அதனால் தான் இவற்றை சாப்பிட்டப்பின் வயிறு உப்பியது போல் இருக்கிறது.

சூயிங் கம்: தேவையில்லாத காற்று உடலில் புகுவதால் தான் வாயுத் தொல்லையோடு, செரிமானப் பிரச்சனையும் ஏற்படுகிறது. அதிலும் சூயிங் கம் சாப்பிடும் போது, தேவையில்லாத காற்று வாயின் வழியாக உடலில் நுழைந்து, வாயுப் பிரச்சனையை உண்டாக்குகிறது. எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

நடத்தல்: உணவு உண்டப் பின் ஒரே இடத்தில் உட்காராமல், சிறிது தூரம் நடக்க வேண்டும். இதனால் செரிமான மண்டலம் நன்கு இயங்குவதோடு, இரைப்பையில் இருக்கும் கடினமான உணவுப் பொருட்களும் உடைந்து செரிமானமாகிவிடும். மேலும் உடல் எடையும் குறையும். செரிமான மணடலம் நன்கு இயங்கினால், வாயுத் தொல்லை நீங்கும்.

புகைப்பிடித்தல்: புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது அனைவருக்கும் தெரியும். ஏனெனில் அதில் உள்ள நிகோட்டின் என்னும் பொருள் பல பக்கவிளைவுகளை உண்டாக்கும். அதிலும் இந்த சிகரெட் உடலில் வறட்சியை ஏற்படுத்துவதோடு, வாயுத் தொல்லையையும் உண்டாக்கும். ஆகவே உடலில் பிரச்சனைகள் வராமலிருக்க புகைப்பிடிப்பதை நிறுத்துவது நல்லது. 

கார உணவுகள்: வயிற்றில் ஏற்படும் உப்புசம், வாயுத் தொல்லை போன்றவற்றை சரிசெய்ய நிறைய கார உணவுப் பொருட்கள் இருக்கின்றன. அதிலும் கிராம்பு, சோம்பு, ஏலக்காய் விதைகள் மற்றும் பல பொருட்கள், இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வை அளிக்கும். ஆகவே இவற்றை சூடான நீருடன் சாப்பிட்டால், வயிற்று வலி மற்றும் வாயுத் தொல்லையை தடுக்கலாம்.

தண்ணீர்: ஒரு நாளைக்கு 8-10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதோடு, இரைப்பையிலிருந்து வாயுவும் வெளியேறிவிடும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget