மீண்டும் ஒரு ஆவிக் கதை தமிழில் தயாராகி வருகிறது. படத்திற்குப் பெயரே அரூபம். அதற்கேற்ப ஒரு ஆவி பழிவாங்கும் கதையாம் இது. விஸ்வரூபம் மாதிரியான படங்கள் ஒரு பக்கம் வந்தாலும் கூட, மறுபக்கம் ஆவிக் கதைகள், பேய்க்கதைகளயும் நம்மவர்கள் விடுவதாக இல்லை. அந்த அடிப்படையில் அரூபம் என்ற பெயரில் ஒரு ஆவிக் கதையை படமாக்கி வருகின்றனர்.
ராணா பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஒரு ஆவி பழிவாங்குவதாக கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.
இந்தப் படத்தை முழுக்க முழுக்க கொடைக்கானலில் வைத்துப் படமாக்கியுள்ளனர். கொடைக்கானல் வனப்பகுதியின் வனப்பை இதில் அழகாககப் படமாக்கியுள்ளனராம்.
படத்தில் மொத்தம் 3 நாயகர்கள். தேவா, சரண், ஜெகன். அதேபோல 2 நாயகிகள். அழகான ரக்ஷிதா மற்றும் அட்டகாசமான சகானா.
உயிருக்குயிரான இரு நண்பர்கள். அவர்களுக்கு ஒரு பெண் தோழி. அப்பெண்ணை படிக்க வைக்கிறான் கதாநாயகன். அதேபோல தனது நண்பனையும் அவனே படிக்க வைக்கிறான்.
ஆனால் சந்தர்ப்ப சூழல் காரணமாக கதாநாயகனும் தனது காதலைத் துறக்க நேரிடுகிறது. இந்த நிலையில்தான் கதாநாயகியும், அவளது இன்னொரு நண்பனும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்கிறார்கள். கொல்லப்பட்டவனின் ஆவி கிளம்பி பழிவாங்கப் புறப்படுகிறது. இதுதான் படத்தின் கதையாம்....
படம் முழுக்க திகிலும், திருப்பமும் ஏகப்பட்டது இருக்காம். படத்தைப் பாருங்க, பயந்து போயிருவீங்க என்று தெம்பூட்டுகிறார் இயக்குநர் வின்சென்ட் ஜெயராஜ். அதையும் தான் பார்த்துருவோம்...!