The Wolfman ஹாலிவுட் சினிமா விமர்சனம்


1930 கள் மற்றும் 40 துகளில் யூனிவர்சல் சூடூடியோ காரர்கள் பல திகில் திரைப்படங்களை எடுத்து தள்ளினார்கள். அவ்வப்போது அந்த திரைப்படங்களை இக்காலத்திற்கேற்றவாறு மீளாக்கம் செய்து வருகின்றார்கள் இதற்கு உதாரணமாக மம்மி போன்ற திரைப்படங்களைக் கூறலாம். The wolfman திரைப்படம் முறையே 1966 மற்றும் 1941இல் அமெரிக்காவில் வெளியாகி இருந்தாலும் மீள 2010ல் திரைப்படம் மீளாக்கம் செய்யப்பட்டு யூனிவர்சல்
ஸ்டூடியோவால் வெளியிடப்பட்டுள்ளது.

கதைக் களம் 1890ல் நடப்பதாக காட்டப்பட்டுள்ளது. ஏதோ ஒருவகை மிருகத்தினால் தம்பி கொலை செய்யபட்ட கதையைக் கேட்டு இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா திரும்புகின்றார் அண்ணன் லோரன்ஸ். மீள வீடு திரும்பும் மகனை வரவேற்கின்றார் ஒரு மாதிரியான போக்குடை தந்தையார் (Anthony Hopkins).

தம்பி கொலையில் ஈடுபட்ட மிருகம் பற்றிய துப்புத் துலக்கலில் ஈடு படப்போய் கடைசியில் ஓநாய் உருவுடைய மிருகத்தினால் கடிபடுகின்றார் நம்ம நாயகன். இவ்வாறாக ஒநாய் உருவுடைய மிருகத்தினால் கடிபட்டால் என்னவாகும் என்பது நாங்கள் அறிந்ததுதானே. அடுத்த பௌர்ணமியில் அவரும் ஒநாயாக மாறுவார்.

ஓநாய் பிடிக்கப்போனவர் கடைசில் ஒநாயாகி மனிதவேட்டை நடத்துகின்றார். பின்னர் பொலிசார் இவரை மடக்கிப் பிடிக்கின்றனர்.

ஒரு ஓநாய் மனிதன் இந்ந லோரண்ஸ் மற்ற ஒநாய் மனிதன் யார் எனபதே கதை. அந்த ஒநாயை பழிவாங்குகின்றாரா நம்ம நாயகன் என்பது மிகுதிக் கதை.

லோரண்ஸாக போட்டரிக்கா நாட்டு நடிகர் Benicio Del Toro நடிக்கின்றார். நடிப்பு என்று பெரிதாக அவர் கிழிக்கவில்லை ஆனால் அவர் அந்த ஒநாய் பாத்திரத்திற்கு அப்படியே நச்சென்று பொருந்துகின்றார். ஆனால் மறுபக்கத்தில் அந்தனி ஹோப்கிங்ஸ் தனக்கு வழங்கப்பட்ட நேரத்தில் பிய்த்து உதறுகின்றார். ஏற்கனவே இவரின் ஹனிபல் திரைப்படம் பார்த்திருந்தால் தெரியும் அண்ணர் எப்படியான வில்லதனமான வில்லங்க நடிகர் என்பது. நிச்சயமாக இந்த திரைப்படத்தை பார்க்கலாம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget