லத்திகா படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் பவர்ஸ்டார் சீனிவாசன். 250 நாட்கள் ஓட்டிய லத்திகா படத்தின் வெற்றியினாலும், 50 லட்சம் ரசிகர்கள் என்ற பப்ளிசிட்டியினாலும் இன்று பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்(!) பவர்ஸ்டார் திடீரென வினய், பிரேம்ஜி, சத்யன், அரவிந்த் ஆகாஷ், லட்சுமிராய் நடித்துக் கொண்டிருக்கும் ‘ஒன்பதுல குரு’ படத்தில்
சேர்க்கப்பட்டார். ஏற்கனவே 4 ஹீரோக்கள் கொண்ட ஒன்பதுல குரு படத்தில் பவர்ஸ்டார் ஐந்தாவது ஹீரோவா என்ற கேள்விக்கு, அவர் ஹீரோ இல்லை என்கிறது ஒன்பதுல குரு படக்குழு. ஒன்பதுல குரு படத்தில் பவர்ஸ்டார் ஒரே ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் நடனமாடுகிறாராம்(ஹீரோயினுடன் அல்ல).
ஒன்பதுல குரு படப்பிடிப்புத் தளத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பவர்ஸ்டார் “ நான் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறேன் என்று பேசிக்கொள்கிறார்கள். இந்த வருடம் 10 கோடி கேட்பேன். அடுத்த வருடம் 15 கோடி கேட்பேன். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. நான் சினிமாவில் வருவதற்காக கோடி கணக்கில் பணத்தை வாரி இரைத்திருக்கிறேன். அந்த பணத்தை திரும்ப எடுக்க கோடிக்கணக்கில் தான் சம்பளம் கேட்க வேண்டும்.
மேலும் எனக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் கோடிகளில் சம்பளம் கேட்கிறேன். தற்போது ஆறு படங்கள் கையில் இருக்கின்றன. மேலும் இரண்டு பெரிய பட்ஜட் படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. பெரிய பட்ஜட் படத்தில் லட்சுமிராய் தான் எனக்கு ஹீரோயின் என்பதையும் இப்போதே சொல்லிவிடுகிறேன். ஒரு படத்தில் நடிக்க கேட்ட போது “ அந்த ஆள் கூட யார் நடிப்பா?’ என்று லட்சுமிராய் என்னை அலட்சியப்படுத்தியதால் தான் இந்த முடிவுக்கு வந்தேன். ஐஸ்வர்யா ராயுடன் நடித்தே தீரவேண்டும் என்ற என் முடிவையும் நான் மாற்றிக்கொள்ளவில்லை.
நான் வெளியிட்ட ஒரு படத்திற்கே(லத்திகா) இவ்வளவு புகழ் கிடைத்துவிட்டதால் மற்ற படங்களை கிடப்பில் போட்டுவிட்டேன். ஆனால் ஆனந்த தொல்லை படத்தை மட்டும் ரிலீஸுக்கு தயாராக வைத்திருக்கிறேன். ரஜினியின் உழைப்பு அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் தான் அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டேன். கோச்சடையானுக்கு போட்டியாக, ஆனந்தத் தொல்லை படம் ரிலீஸ் செய்யப்படும்” என்று கூறியபின் பவர்ஸ்டாரே சிரித்துவிட்டார்.