பாரதிராஜாவினால் கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமானவர் ப்ரியாமணி. அதன்பிறகு அமீரின் பருத்தி வீரன் படத்தில் நடித்த முத்தழகி வேடம் அவருக்கு தேசிய விருது வாங்கித்தந்தது. இருப்பினும் ஏனோ அதன்பிறகு தமிழ் சினிமா ப்ரியாமணியை கண்டுகொள்ளவில்லை. இதனால் தேசிய விருது பெற்ற ஒரு நடிகையை தமிழ் சினிமா மதிக்கத்தவறி விட்டது என்று புலம்பிக்கொண்டே கன்னட சினிமாவை முற்றுகையிட்டார் ப்ரியா.
கூடவே கவர்ச்சியிலும் கலக்கி எடுத்ததால் இப்போதுவரை கன்னடததில் ப்ரியாமணிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு இருந்து வருகிறது.
ஆனால் இதுவரை கதாநாயகி வேடங்களுக்கு மட்டுமே முயற்சி எடுத்து வந்த ப்ரியாமணி, சமீபகாலமாக தன் இளமை மீதான மவுசு குறைந்து வருவதால், மாற்று பாதையில் பயணிக்க முடிவெடுத்திருக்கிறார். அதன்காரணமாக, இனி எல்லாவிதமான மாறுபட்ட வேடங்களிலும் நடிப்பேன். குறிப்பாக வில்லி வேடங்கள், குத்தாட்டம் என்று நடிக்க ரொம்ப ஆர்வமாக இருப்பதாக கூறி வருகிறார். அதுமட்டுமின்றி, பழைய பந்தாக்களையெல்லாம் வெட்டி எறிந்து விட்டு, தயாரிப்பாளர்களின் விரலுக்கேற்ற வீக்கமான நடிகையாகவும் தன்னை முழுசுமாக மாற்றிக்கொண்டுள்ளார் ப்ரியாமணி.