சினிமா வெற்றி விழாக்கள், திரையுலக விழாக்களில் பங்கேற்பதில்லை, என்று நடிகர் சிம்பு அதிரடி முடிவு எடுத்திருக்கிறாராம். தமிழ் சினிமா உலகில் தனக்கென்ற ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர் சிம்பு. அஜித்தின் படங்களை சராசரி ரசிகன் போல் முதல் நாள் முதல் காட்சியே பார்த்துவிடுவார். அந்த அளவுக்கு அஜித்தின் தீவிர ரசிகர். அஜித்தின் பல வழிமுறைகளை அப்படியே பின்பற்றுபவர் சிம்பு.
அஜித் தான் நடித்த படங்களின் வெற்றி விழாக்களிலோ, திரையுலகம் நடத்தும் விழாக்களிலோ பெரிதாக கலந்து கொள்வதில்லை. தன்னுடைய படங்களைப் பற்றி விளம்பரமும் கொடுப்பதில்லை. அதேபோல், இனி சிம்புவும் அஜித்தின் பாணியை பின்பற்ற முடிவு செய்துள்ளாராம். இதனால் பலரின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிட்டாலும் அதை பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது இந்த முடிவை பின்பற்றப் போவதாக கூறியுள்ளார்.