Smart People ஹாலிவுட் சினிமா விமர்சனம்


ஒரு சோகமான குடும்பத்தைப் பற்றிய கதை. அதை சற்றே நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள். மனைவியின் இறப்பிலிருந்து பலவருடங்களாக மீளமுடியாமல் தவிக்கும் ஒரு பேராசிரியர், தனது வாழ்க்கையின் எல்லாப்பகுதியையும் தானாகவே சிதைத்துக்கொண்டிருக்கிறார். இது அவரை மட்டுமல்லாது அவரின் இரு பிள்ளைகளைகளின் வாழ்க்கைகளையும் பாதிக்கின்றது. இது போதாதென்று ஓசிச்சோற்றுக்கு வந்துசேருகின்ற இவரின் சகோதரன்.
இவ்வாறான இந்த மனிதரின் வாழ்க்கையில் சின்னதொரு ஒளியாக வந்துசேருகிறார் ஒரு பெண். இவர்களின் வாழ்க்கைகளைப் பற்றியதே படம்.

ஆங்கிலம் சரியாக புரியவில்லையென்றால் படத்தின் பல நகைச்சுவை வசனங்களும் எடுபடாமல் போய்விடும். இருக்கும் நகைச்சுவை கூட உண்மையாக சிரிப்பை வரவழைப்பதற்காக இல்லை, சிந்திப்பதற்காகவே உள்ளது. எனவே பொழுதுபோக்கிற்காகப் பார்க்கற்கூடிய படம் என்று இதைக் கூற முடியாது.

படத்தில் மகளிற்குவரும் கனடிய நடிகர் Ellen Pageஐ எனக்கு மிகவும் பிடிக்கும். நடிப்பின் ஆரம்பக்காலத்திலிந்தே இவர் தனது திறமைகளை காட்டிவந்திருந்தாலும், சமீபத்தைய Juno படத்தின் பின்னர் மிகவும் பிரபல்யம் அடைந்திருந்தார். அதற்காக Oscarற்கும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். எனினும் இந்தப் படத்தில் அவரின் திறமைக்கு அவ்வளவு வேலை கொடுக்கப்படவில்லை. என்றாலும், பொதுவாக படத்தில் எல்லா நடிகர்களும் நேர்த்தியாக தங்களது வேலைகளைச் செய்திருக்கிறார்கள்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget