Zombieland ஹாலிவுட் சினிமா விமர்சனம்

இந்த சொம்பி (Zombie) என்ற எண்ணக்கருவை வைத்துப் பல திகல் திரைப்படங்கள் வெளிவந்தன. அவற்றில் Rsident Evil, The Legend போன்ற திரைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். அவற்றில் வரும் அதே சொம்பிகள்தான் இந்த திரைப்படத்திலும் ஆனால் ஒரு வித்தாயாசம், நான் அறித்தவரை இதுதான் சொம்பிகளை வைத்து எடுத்த முதலாவது காமடித் திரைப்படம்.
காமடித் திரைப்படமா, இல்லை திகில் திரைப்படமா என்று யோசித்துக் கொண்டிருக்கையிலே திரைப்படம் கல கலவென்று முடிந்துவிடுகின்றது. வழமைபோல ஹொலிவூட் பாலா சொல்கின்ற கனடாவில் தொடங்கி மெக்சிக்கோவில் முடிகின்ற உலகத்தில் இருக்கும் மானிடர்கள் பலரும் சொம்பி தாக்குதலில் தாங்களும் சொம்பி ஆகிவிட எஞ்சியிருக்கும் சில மானிடர்களின் சிரிப்புச் சாகசமே இந்தத் திரைப்படம்.

Columbus என்று ஒரு பொடியன் அவனுக்கு எதைக் கண்டாலும் பயம். அதிலும் கோமாளியைக் கண்டால் இன்னும் பயம். ஆமாம், தேனாலி கமல் மாதிரி. அதனால் சொம்பித் தாக்குதலில் இருந்து தப்பிக்க தனக்கு தானே பல விதிகளை வகுத்துக்கொள்கின்றான். உதாரணமாக காரில் ஏறும் போது பின் ஆசனத்தில் சொம்பி இருக்கின்றதா என்று பார்த்தல், இரண்டுக்குப் போகும் போது கையில் துப்பாக்கியுடன் இருத்தல், முதல் தடவை சொம்பியை சுட்டாலும் இரண்டாம் தடவையும் மண்டையை குறிபார்த்துச் சுடதல் போன்றவையடக்கம். அதைவிட எப்போதும் ஹீரோவாக ரை பண்ணாதே என்கிறதும் ஒரு முக்கியமான விதிமுறை.

இந்த கொலம்பஸ் தன் தாய் தந்தையர் இருக்கும் அமெரிக்காவின் கிழக்குத் திசை நோக்கிப் பயனிக்கின்றான், அவனுடன் இணையும் எதற்கும் அஞ்சா ஒரு மனிதன் மற்றும் திருட்டு தண்டா செய்யும் 2 பெண்கள்.

அப்புறம் அந்த திருட்டுத் தண்டா செய்யும் ஒரு பெண்ணுடன் நம்மவர் காதலில் விழுவார் என்பதையும் நான் சொல்லியா உங்குளுக்குத் தெரியவேண்டும்.

இவர்கள் எவ்வாறு ஒருத்தருக்கு ஒருவர் அறிமுகம் ஆகின்றார்கள், இவர்களின் பயனம் போன்றவற்றை மையப்படுத்தி கதை மிகுதி நகர்கின்றது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget