கூகுள் வழங்கும் புதிய சேவை உங்களுக்கு தெரியுமா

உலகின் சிறந்த தேடுபொறியான கூகுள் நிறுவனம் சில தினங்களுக்கு முன்னர் தனது 'கூகுள் ரீடர்' வசதியை நிறுத்தப்போவதாக அறிவித்தது. இந்த புகழ்பெற்ற சேவையை நிறுத்துவதற்கு காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், புதிய சேவையொன்றை ஆரம்பிப்பதற்கே இதை நிறுத்துவதாக சிலர் தெரிவிக்கின்றனர். இந்த கூகுள் ரீடர் சேவை வரும் ஜூலை 1, 2013 வரை இருக்கும் எனவும் அதற்குமேல் இருக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன் பிறகு கூகுள் புதியசேவையாக நியூஸ் பேப்பர் என்ற செய்தி முறையை அறிமுகப்படுத்தப் போவதாக தெரிகிறது. ஏற்கெனவே கூகுள் நியூஸ் சேவையை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

புதிய சேவையை எந்த மாதிரி வழங்கும் என்பதில் பல குழப்பங்கள் இருந்தாலும், கூகுள் ப்ளே வசதியின் மூலம் இச்சேவையை வழங்கவுள்ளதாகவும், இதை ஆன்ட்ராய்டு போன்கள் மற்றும் டேப்லெட்களில் பயன்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே உண்மைநிலை தெரியும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget