சுண்டாட்டம் சினிமா விமர்சனம்


கேரம் போடு விளையாட்டு மீது தீவிரமான ஆசைக் கொண்டிருக்கும் ஹீரோ இர்பாஃன், தன்னுடைய விளையாட்டு திறமையால் ஏரியா தாதவான நரேனுக்கு பிடித்தமானவனாகிறார். மேலும் நரேனின் கேரம் போடு கிளப்பில் வேலைக்கும் சேறுகிறார். அதே சமயம் நரேனின் கூட்டத்தில் கேரம் போடு விளையாடுவதில் திறமைசாலியான காசி என்பவனை கேரம் போடு விளையாட்டில் இர்பாஃன் ஜெயித்துவிடுகிறார்.
இதை அவமானமாக எண்ணும் காசி இர்பாஃனை பழி வாங்க முடிவு செய்கிறார். அதே சமயம் தாதா நரேனை, அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமான குணா, என்பவர் நரேனின் எதிரியிடம் பணத்தை வாங்கிக்கொண்டு நரேனை கொலை செய்ய முயற்சிக்கிறார். குணா நரேனை கொலை செய்ய போடும் ஒவ்வொரு திட்டமும் இர்பாஃனால் தடைப்படுகிறது.

இதற்கிடையில் இர்பஃனுக்கும், அருந்ததிக்கும் காதல் ஏற்படுகிறது. இவர்களுடைய காதலுக்கு அருந்ததியின் போலீஸ்கார அண்ணன் தடையாக இருக்க, ஒரு கட்டத்தில் அருந்ததியை அழைத்துக்கொண்டு ஊரை விட்டே அவர் சென்று விடுகிறார். அருந்ததியை காணாமல் தேடும் இர்பாஃன் ஒரு கட்டத்தில் வேலைக்காக துபாய் செல்ல முடிவெடுக்கிறார்.

இறுதியில் இர்பாஃன், அருந்ததி ஒன்று சேர்ந்தார்களா? காசி இர்பாஃனை பழி வாங்கினானா? நரேனை கொலை செய்யும் முயற்சித்த குணாவின் திட்டம் பலித்ததா? இதற்கெல்லாம் விடைதான் இப்படத்தின் க்ளைமாக்ஸ்.

இர்பாஃன் முதல் முறையாக ஹீரோவாக நடித்திருக்கிறார். வட சென்னை இளைஞர் தோற்றத்திற்காக நீண்ட முடி, தாடி என்று தன்னுடைய உருவத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார். நடிக்கும் வாய்ப்பு இல்லை என்றாலும், நடிக்க கூடிய சில இடங்களில் கூட அமைதியாகவே இருக்கிறார்.

அருந்ததி இர்பாஃனுக்கு அக்கா போல காட்சியளித்தாலும், எப்படியோ கஷ்ட்டப்பட்டு, நான் தாங்க அவருக்கு ஜோடி என்பதை நிரூபிக்க ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார்.

நரேன் எப்போதும் போல தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். காசி, குணா உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வு.

அமீர் பாய் என்ற வேடத்தில் நடித்திருக்கும் வில்லனைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. காரணம், தளபதி படத்தில் ஜிப்பா போட்டுக்கொண்டு ஒரு மொட்டை வில்லன் வருவாரே அதே வேடம் தான் இவருக்கும். மொட்டைக்கு பதில் முடியும், தாடியுமாக வருகிறார். இவரைத் தவிர்த்து படத்தில் இடம்பெறும் மற்ற கதாபாத்திரங்களின் தேர்வுக்காக இயக்குநரை பாராட்டலாம்.

புதுமுக இயக்குநர் பிரம்மா ஜி.தேவ் இயக்கியிருக்கிறார் வட சென்னை வாழ்க்கையப் படமாக எடுத்திருக்கும் இவர், வட சென்னையில் கேரம் போடு விளையாட்டு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதையும், அதில் ஈடுபட்டுள்ள இளைஞர்களைப் பற்றியும் நன்றாகவே சொல்லியிருக்கிறார்.

இவற்றை சொன்ன இயக்குநர் இறுதில் படத்தில் கதையைதான் கோட்டை விட்டிருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநருக்கு இறுதியில் படத்தில் என்ன சொல்வது, படத்தை எப்படி முடிப்பது என்று ஏகப்பட்ட குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. 

வட சென்னையும், கேரம் போடு விளையாட்டும் என்ற தலைப்பில் ஒரு டாக்குமென்டரி படமாக எடுக்க வேண்டிய கதையை, முழுநீள கமர்ஷியல் படமாக எடுக்க பிரம்மா ஆசைப்பட்டிருக்கிறார்.

படத்தில் ப்ளஸ் என்றால், அது நடிகர்களின் தேர்வும், படம் எடுக்கப்பட்ட விதமும் தான். மற்றபடி இந்த சுண்டாட்டம் விளையாட்டு சுவாரஸ்யமாக இல்லை.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget