ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது பெரும்பாலான நேரங்களில் தெரிவதில்லை என்று மருத்துவ ஆய்வு கூறுகிறது. மிகத் தீவிரமாக மாரடைப்பு ஏற்படும்பட்சத்தில், அது மாரடைப்புதான் என்று தெரிந்தால் மட்டுமே அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ள முடியும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
நோயாளிகளின் அறிகுறிகளை வைத்தே டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள் என்பதால், பெண்களுக்கு மாரடைப்புக்கான சிகிச்சை தெரிய வராமல் போய் விடுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
முதுகின் மேல்புறம் வலி, வாந்தி, சுவாசிப்பதில் ஏற்படும் சிரமம், மூக்கடைப்பு, அஜீரணம் போன்றவை பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதன் அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாக மாரடைப்பு விகிதம் பெண்களுக்கு குறைவு என்ற போதிலும், அவை ஏற்படும் அறிகுறிகள் தெரியாத போது, சிகிச்சை எடுத்துக் கொள்ள இயலாமல் போவதால், திடீர் மரணம் ஏற்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
மாரடைப்பு ஏற்படும் பெண்களுக்கு, அதற்கான அறிகுறிகள் வெகுநேரம் முன்பாகவே தெரிய ஆரம்பித்து விடும்.. எனவே மாரடைப்பு என்று தெரிய வந்தவுடன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் தீவிர சிகிச்சை அளிக்கக்கூடிய ஆம்புலன்ஸில் செல்வதே சிறந்தது. அப்போது தான் உயிரைக் காப்பாற்ற முடியும்.