பாலிவுட் நளின நாயகி மாதுரி தீட்ஷித்

பாலிவுட்டின் மாஜி ஹீரோயின் மாதுரி தீட்ஷித், நடிப்பை விட, தன் நளினமான நடன  அசைவுகளால், ரசிகர்களை கட்டிப் போட்டவர். அதிலும், "தேசாப் படத்தில், "ஏக் தோ தீன் என்ற பாடலுக்கு, அவர் ஆடிய நடனத்தை, பாலிவுட் ரசிகர்கள் மட்டுமல்லாமல், கோலிவுட் ரசிகர்களும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த அளவுக்கு அசாத்தியமான நடன திறமை கொண்ட, மாதுரிக்கே, ஒரு பிரபலமான நடன கலைஞருடன், நடனமாடப் போவதை நினைத்து, கலக்கமாக
இருக்கிறதாம்.

ஒரு,"டிவி நிகழ்ச்சிக்காக, பிரபல கதக் நடன கலைஞர், பிர்ஜு மகாராஜுடன் நடனமாடப் போகிறார், மாதுரி. "விஸ்வரூபம் படத்துக்கு, "உன்னை காணாத என்ற பாடலுக்கு, நடனம் அமைத்து, தேசிய விருதை பெற்றவர் தான், பிர்ஜு மகாராஜ். இதுகுறித்து மாதுரி கூறுகையில், "பிர்ஜு மகாராஜ், இந்தியாவின் மிகச் சிறந்த நடன கலைஞர்களில் ஒருவர். அவருடன் நடனமாடப் போவதை நினைத்தால், இப்போதே, வயிற்றுக்குள் பட்டாம் பூச்சிகள் பறக்கின்றன. பயமாகவும், நடுக்கமாகவும் உள்ளது. என் வாழ்நாளில் கிடைத்த, மிகப் பெரிய வாய்ப்பாக இதை கருதுகிறேன் என்கிறார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget