முதல் முறையாக கருத்தரிக்கும் மகளிர் தெரிந்து கொள்ள வேண்டியவை எவை?

கர்ப்ப காலத்தில், குறிப்பாக முதன்முறையாக கருத்தரித்திருப்போர், அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. கர்ப்ப காலத்தில் உடலில் பல்வேறு மாற்றங்கள், அசௌகரியங்கள் நிகழும். கர்ப்ப காலமான 9 மாதங்கள் முழுவதிலும் நீடிக்கக்கூடும், ஆனால் சில அசௌகரியங்கள் ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ அல்லது மூன்று மாத
காலமோ இருந்து, பின் மறைந்து விடும். 

எவ்வாறாயினும், இந்த அசௌகரியங்களை, குழந்தைக்கு பாதிப்பு உண்டாக்கக்கூடிய மருந்து மாத்திரைகளின் உதவியின்றி, ஓரளவுக்கு தாங்கிக் கொள்ளக் கூடியவாறும், எப்படியாவது இயற்கை முறையில் குறைப்பதற்கான தேவையை நன்கு உணர்வோம். 

அவ்வாறு கர்ப்ப காலத்தில் தோன்றக் கூடிய பொதுவான அசௌகரியங்களுள், வயிறு, அடிவயிறு மற்றும் கால்கள் ஆகியவற்றில் உண்டாகும் தசைப்பிடிப்புகளும் ஒன்றாகும். இந்த தசைப்பிடிப்புகளைக் கட்டுப்படுத்தவும் அவற்றை சிறிது காலத்திற்கேனும் வராமல் தடுப்பதற்கும் சில வழிகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்...  

• சுடுநீர் குளியல் உடல் பாகங்களின் இயக்கத்தை சீராக்கும். ஆனால், கர்ப்பிணிகள் மிதமான சூடு இருக்கும் தண்ணீரையே உபயோகிக்க வேண்டும். மேலும், மிக நீண்ட நேரம் குளியலறையில் இருப்பதையும் தவிர்த்து, 15 முதல் 20 நிமிடங்களுக்குள் குளித்து முடித்து வெளியே வர வேண்டியது அவசியம். இந்த கர்ப்ப கால அசௌகரியத்திலிருந்து, எவ்வித அபாயங்களோ அல்லது பக்கவிளைவுகளின்றி வெளியே வர, இந்த சுடுதண்ணீர் குளியல் மிகவும் பாதுகாப்பான ஒரு வழிமுறையாக விளங்குகிறது. 

• சூடு பரப்பும் பைகள் தற்போது சந்தைகளில் கிடைக்கின்றன. அவற்றைக் கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களில் வைத்து சிறிது நேரம் அழுத்துவதன் மூலம் சரிசெய்யலாம். 

ஒருவேளை அது போன்ற சூடு பரப்பும் பைகள் இல்லையெனில், ஒரு சுத்தமான துணியை சுடுதண்ணீரில் நனைத்து, அத்துணியில் அதிகமாக இருக்கக்கூடிய நீரைப் பிழிந்து விட்டு, அதனை தசைப்பிடிப்பு உள்ள இடங்களில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். 

இது தற்காலிக நிவாரணம் தருவதாக இருப்பினும், உடனடியாக பலன் அளிக்கக்கூடிய ஒரு சிகிச்சை முறையாகும். முக்கியமாக இது கீழ் முதுகு போன்ற பகுதிகளில் இருக்கக்கூடிய தசைப்பிடிப்புகளுக்கு சிறப்பான நிவாரணம் வழங்கக்கூடியதாகும். 

• பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகிய தாதுப்பொருட்கள், தசைப்பிடிப்புகளுக்கு எதிரான நற்பயன்கள் கொண்டவைகளாக நம்பப்படுகின்றன. தசைப்பிடிப்புகளை எவ்வித சிரமுமின்றி குணமாக்க, தினமும் உணவில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் அதிகம் கொண்ட உணவுப் பொருள்களைக் கட்டாயமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

வாழைப்பழங்கள், அதிக அளவு பொட்டாசியச் சத்து உள்ளது. உடலின் கால்சியத் தேவைகளுக்கு, வஞ்சிர மீன் வகைகள், பச்சை இலைகள் நிறைந்த காய்கறிகள், பாதாம் பருப்பு, பால் பொருட்கள் மற்றும் நெத்திலி மீன் வகைகளை உணவில் நிறையச் சேர்த்துக் கொள்ளலாம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget