பங்குச்சந்தை ஆவணம் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி?

ஆவணங்கள் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி என்ற தலைப்பில் இன்று பங்குச்சந்தை ஆவணம் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி, அதற்கான நடைமுறைகள் என்ன? எவ்வளவு கால அவகாசம் பிடிக்கும், என்ன செலவாகும் என்பதைப் பார்ப்போம்.

பங்குச்சந்தை ஆவணம்:

பங்குச்சந்தை ஆவணம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளரை அணுக வேண்டும். காவல்துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண் ஆகிய ஆவணங்களைத் தர வேண்டும். இதற்குத் தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை. ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள் கிடைக்கும்.

நடைமுறை:

முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுத வேண்டும். இதன் அடிப்படையில் காவல்துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும். அவ்வாறு செய்ய வேண்டும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget