துருவ நட்சத்திரத்துக்கு ஏற்ற பருவ நட்சத்திரம்

எப்போதோ தொடங்கியிருக்க வேண்டிய துருவ நட்சத்திரம் இதுவரை தொடங்கப்படாமலே உள்ளது. காரணம் நாயகி கௌதம் வாசுதேவ மேனனின் சாய்ஸ் த்ரிஷா. சூர்யாவின் சாய்ஸ் அமலா பால். இந்த முதல் குழப்பம் இப்போது முற்றிய குழப்பமாகியிருக்கிறது.

கதைப்படி ரொம்ப இளமையான நடிகை தேவையாம். பள்ளிக்குப் போற வயதில் இருந்தால் நல்லது. த்ரிஷாவை எப்படி யூனிஃபார்ம் போட்டு ஸ்கூலுக்கு
அனுப்ப முடியும்? அதனால்....

அமலா பாலுக்கும் அதேதான் பிரச்சனை. சமந்தா நீதானே என் பொன்வச்தத்தில் ஸ்கூலுக்கு போனார். அவரை ஒப்பந்தம் செய்யலாம் என்றால் சூர்யா லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு அவரைதான் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

இந்த வயது பிரச்சனை காரணமாக கடல் துளசிவரைக்கும் இறங்கி வந்திருப்பதாக கேள்வி.

எப்போது துருவ நட்சத்திரம் என்று பெயர் வைத்தார்களோ... எட்டாமலேயே இருக்கு.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget