விரைவில் பணக்காரனாகும் ஆசையில், குறுக்குவழி தேடும் ஒரு தந்தையும், அவரது இளைய மகனும்! அதற்கு முட்டுக்கட்டை போடும் மூத்த மகன்! ‘காமெடி’ கலாட்டா அரங்கேறுவது... இங்கிலாந்தில்!
வாரணாசியில் சாமியார் வேடம் போட்டு சம்பாதித்துக் கொண்டிருக்கும் தரம்சிங் (தர்மேந்திரா). அவருக்கு உள்கையாக அவரது இளைய மகன் கஜோதர் சிங் (பாபி தியோல்). தியானக் கூட்டத்தில் சந்திக்கும்
யோகராஜ் கன்னா (அன்னு கபூர்) ஒரு லண்டன் பணக்காரன். அவனை வளைத்து, அவன் பெண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டால், சீக்கிரம் பணக்காரன் ஆகிவிடலாம் என்பது தரம்சிங்கின் திட்டம்.
ஓபராய் என்கிற பணக்காரன் வேடம் போட்டு, மகனுடன் லண்டன் வரும் தரம், அங்கே சந்திப்பது... நியாயம், நேர்மை என வாழும், தன் முதல் மகன் பரம்வீர் சிங்கை (சன்னி தியோல்)! கஜோதர், பிரேம் ஓபராய் என்று பெயர் மாற்றி சுமனை (நேகா ஷர்மா) காதலிக்கிறான். ஆனால்... அவள் யோகராஜின் நண்பன் மகள். உண்மை தெரிந்ததும்... தனக்கு இரட்டைப் பிள்ளைகள் என்றும், இன்னொருவன் ‘க்யூ’ என்கிற ஓவியன் என்றும் புளுகுகிறான் தரம். கஜோதரே இரட்டை வேடம் போடுகிறான். வீட்டை கவனித்துக் கொள்ளும், ஒரு புத்திசாலி மனித குரங்கின் மூலம் அவன் வரைகின்ற ஓவியங்களை, உலகமே பாராட்டுகிறது. யோகராஜின் உண்மையான மகள் ரீத் (கிறிஸ்டினா அகீவா) மீது, பரம்வீருக்கு காதல். ஆனால் அவளோ, ‘க்யூ’வின் ஓவியங்களால் கவரப்படுகிறாள். பரம்வீர் - ரீத் இணைந்தார்களா? சுமன் - பிரேம் காதல் என்னவாயிற்று? என்பது க்ளைமாக்ஸ்.
படம் ‘களைப்பு’ தரவி்ல்லை! சுமோ குண்டர்களை எதிர்த்து பரம்வீர் போடும் ‘க்ளைமாக்ஸ்’ சண்டை, பீட்டர் ஹெய்னின் பேர் சொல்கிறது. அந்த தத்ரூப போயிங் விமானம், கலை இயக்கத்தின் வெற்றிப்பொட்டு. மற்றபடி... அழகுப் பதுமைகளாக வரும் நேகாவுக்கும், கிறிஸ்டினாவுக்கும் அதிக அளவு காட்சியில்லை. அப்பத்தை, அப்பன் பிள்ளைகள் பங்கு போட்டுக் கொண்டதில், அழகு பூனைகளுக்கு துகள்களே மிச்சம்!
மொத்தத்தில், "யம்லா பக்லா தீவனா" - "காதல் பிளஸ் காமெடி"