எக்ஸெல் தெரிந்த பெயர் தெரியாத தகவல்

எக்ஸெல் ஒர்க்ஷீட்களில், தகவல்கள் கொண்டுள்ள செல்களைப் பிரித்துப் பார்க்க, செல்களின் கிரிட் லைன்கள் வண்ணத்தில் அமைவது நமக்கு உதவியாக இருக்கும். பொதுவாக, தொடக்கத்தில் இந்த செல் பார்டர் கோடுகள் கருப்பு வண்ணத்தில் இருக்கும். ஆனால், இவற்றை நம் விருப்பப்படி, ஸ்டைலாக வண்ணங்களில் மாற்றிக் கொள்ளலாம். இந்த பார்டர் கோடுகளின் வண்ணங்களை மாற்ற, கீழ்க்காணும் செயல்முறைகளைப் பின்பற்றவும்.

1. டூல்ஸ் (Tools) மெனுவிலிருந்து ஆப்ஷன்ஸ் (Options) தேர்ந்தெடுக்கவும். உடன் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

2. இந்த விண்டோவில் கிடைக்கும் டேப்களில் View டேப்பினை அழுத்தித் தேர்ந்தெடுக்கவும்.

3. இங்கு தரப்படும் கலர் விரி மெனுவில், உங்களுக்குப் பிடித்தமான வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். Gridlines செக் பாக்ஸ் கட்டத்தில் டிக் அடையாளம் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். 

ஒவ்வொரு ஒர்க் ஷீட்டிற்கும், வேறுபாடான வண்ணங்களைக் கொடுத்து, அடையாளம் காணும் வகையில், வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget