மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி?

தினசரி 10 கிராம் பட்டன் காளானைச் சாப்பிட்டு வந்தால் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். 
1. கருவுற்ற தாய்மார்கள் காளான் உண்பதைத் தவிர்க்க வேண்டும். 
2. காளானைச் சமைக்கும்போது காரத்துக்கு மிளகு சேர்த்து சமைத்தால் விஷமுறிவாக மிளகு செயல்படும்.
தற்போது நட்சத்திர ஓட்டல்களில் காளான் உணவுகள் அதிகம் இடம் பிடிக்கின்றன. காளான் பற்றி நமக்கு பல சந்தேகங்கள் இருக்கின்றன. 

* புற்றுநோயால் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அவற்றில் மார்பக புற்றுநோயால் பெரும்பாலான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் 30 வயதுள்ள 229 பெண்களில் ஒருவருக்கும், 40 வயதுள்ள 68 பெண்களில் ஒருவருக்கும், 50 வயதில் 37 இல் ஒருவருக்கும் நிச்சயம் மார்பக புற்றுநோயானது இருக்கிறது என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.  

மார்பக புற்றுநோயானது அம்மா, பாட்டி போன்றவர்களுக்கு, 50 வயதிற்கு முன்னரே மார்பக புற்றுநோயானது வந்தால், அவை நிச்சயம் அவர்களது குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. சொல்லப்போனால், இதை ஒரு பரம்பரை நோய் என்றும் சொல்லலாம். ஆகவே, இத்தகைய நோய் வருவதற்கு முன்பே, அதனை வராமல் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

குறிப்பாக, இந்த நோய் ஒருசில பழக்கவழக்கங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளின் மூலமாகவும், மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. உதாரணமாக, உணவுக்கட்டுப்பாடு இல்லாதது, உடல் எடை அதிகரித்தல், புகைப்பிடித்தல், போதைப் பொருட்களை பயன்படுத்துதல் போன்றவையும் மார்பக புற்றுநோயை அதிகரிக்கும். 

காளான் என்பது நூறு சதவிகிதம் சைவ உணவுதான். எல்லோருமே காளானை உண்ணலாம். இதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பதன் காரணம் மிகக் குறைவான கலோரிகளே இதில் உள்ளது. அதே நேரம் இதில் கொழுப்புச்சத்து மிக மிகக் குறைவு. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உண்ண நினைக்கும் உணவு இது. 

இதில் `பி' வைட்டமின்களான பாந்தியானிக் ஆசிட், பி2, பி3, பி6 மற்றும் ஃபோலிக் ஆசிட் உள்ளன. மினரல்களில் காப்பர் அதிகளவு உள்ளது. காளானில் உள்ள இர்கோஸ்டீரால் சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்களால் வைட்டமின் `டி' ஆக மாற்றப்படுகிறது. மற்றக் காய்கறிகளை விட புரதம் காளானில் அதிகம் உள்ளது. 

பாஸ்பரஸ், ஜிங்க் மற்றும் பொட்டாஷியம் சத்தும், நார்ச்சத்தும் அதிகம். பொதுவாக `பி' காம்ப்ளெக்ஸ் வைட்டமின் ஒரே உணவில் இத்தனை இருப்பது குறைவு. இவையெல்லாம் மட்டுமின்றி, கேன்சர் வராமல் பாதுகாக்கக் கூடிய சக்தி இதில் உண்டு என்பது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

காளானுக்கு தனி ருசி அதிகம் இல்லாததால், எந்தக் காய்கறிகளுடனும் கலந்து சமைக்கலாம். சீக்கிரமாக வதங்கி விடும். தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டிய அவசியம் இல்லை. எந்த வகைக் காளானும் உடலுக்கு நல்லதுதான். எந்தப் பாகத்தையும் வெட்டி எறியக் கூடாது. முழுவதையும் உபயோகப்படுத்தலாம். 

காளான்களில் அடங்கியுள்ள சுவை, மணம், ஊட்டச்சத்து ஆகியவை மேல்நாட்டினரைப் பெரிதும் கவர்ந்து உள்ளதால், வெள்ளைப்பட்டன் மஷ்ரூம் எனப்படும் காளான் வகை, பிரான்ஸ் நாட்டில் முதன்முதலாக பயிரிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கிழக்காசிய நாடுகளிலும் பரவலாக வளர்க்கப்பட்டன. 

இந்தியாவில் காளான்கள் 1943-ம் ஆண்டு முதன்முதலில் கோயம்புத்தூரில் அறிமுகப்படுத்தப்பட்டது. உலக அளவில் புரதப் பற்றாக்குறையினால் சிரமப்படுகின்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் புரதப் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர். 

புரதச்சத்தை அதிக அளவில் தருகின்ற விலங்குகள் மற்றும் தாவரங்கள் போன்றவற்றிலிருந்து கிடைக்கின்ற மரபு சார்ந்த புரதம் ஒன்றினை மட்டும் கொண்டு நம்முடைய ஒட்டுமொத்தப் புரதத் தேவையைப் பூர்த்தி செய்யமுடியாது. இதற்குத் தகுந்த ஒரு மாற்று உணவாகக் காளான்களை ஏற்றுக் கொள்ளலாம் என்று உலக உணவு மற்றும் வேளாண் கழகத்தினரும், ஐக்கிய நாடுகள் அமைப்பும் பரிந்துரை செய்துள்ளன. 

இறைச்சி, மீன், முட்டை, பச்சைப் பட்டாணி போன்றவற்றிற்கு அடுத்தப்படியாக காளான்கள் அதிக அளவு புரதத்தைத் தருகின்றன. அது மட்டுமின்றி, காளான்களுக்குத் தனித்தன்மை உள்ளது. அதாவது, மேற்கூறிய உணவுகளைக் காட்டிலும் விரைவாக செரிமானம் ஆகக்கூடிய குணமுடையது காளான்கள். 

எளிதாகச் செரிமானம் ஆகக்கூடிய புரதத்தைத் தருவதுடன் மனித உடல் செயல்பாட்டில் இன்றிமையாததாகக் கருதப்படும் சிஸ்டீன், ஹிஸ்ட்டின், லைசின், அஸ்பார்டிக் அமிலம், செரின், கிளைசின் மற்றும் மீத்தியோனைன் ஆகிய அமினோ அமிலங்களையும் காளான்கள் அளிக்கின்றன. 

காளான்களில் அதிகமான பொட்டாசியமும் குறைவான சோடியமும் உள்ளதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல உணவாகக் கருதப்படுகிறது. புரதச்சத்து அதிகமாகவும், கொழுப்புச் சத்து குறைவாகவும் இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதைப் பயன்படுத்தலாம். 

இந்தியாவில் ஏறத்தாழ 70 அடிப்படைப் பிரிவுகளைச் சேர்ந்த 180 வகை உணவுக் காளான்கள் வளர்கின்றன. இவற்றில் மிகவும் பிரபலமானது வெள்ளை பட்டன் காளான் 69.8 சதவிகிதமும், ஷிடேக் வகைகள் 14.2 சதவிகிதமும், வைக்கோல் காளான் 3.7 சதவிகிதமும் விவசாயிகளால் பயிரிடப்படுகின்றன. 

காளான் வளர்ப்பை இந்தியா மற்ற நாடுகளைக் காட்டிலும் மிகவும் பின்னால் தொடங்கினாலும், தற்போது மற்ற நாடுகளைக் காட்டிலும் முன்னணியில் உள்ளது. பட்டன் மஷ்ரூம், ஸ்ட்ரா மஷ்ரூம், ஆயிஸ்டர் மஷ்ரூம் (சிப்பிக் காளான்) எனப்படும் மூன்று வகைக் காளான்களும் தமிழ்நாட்டில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. 

தென் இந்தியாவை விட வடஇந்திய மாநிலங்களில் காளான்கள் மிகவும் விரும்பி உண்ணப்படுகின்றன. ஆண்டு ஒன்றுக்கு 550 டன் காளான்கள் வட மாநிலங்களில் பயிரிடப்படுகின்றன. 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget