விண்டோஸ் எட்டும் தொழிற்நுட்ப பிட்டும்

டச் கீ போர்ட்: மாறா நிலையில், டச் கீ போர்ட் செயல்படுகையில் நாம் டைப் செய்திடுகையில், சில ஒலிகளை எழுப்பும். எடுத்துக் காட்டாக, ஒவ்வொரு வாக்கியத்தின் முதல் சொல்லின் முதல் எழுத்தைப் கேப்பிடல் எழுத்தாக மாற்றுகையில், ஸ்பேஸ் பாரினை இருமுறை தட்டினால், வாக்கியத்திற்கு புள்ளி வைத்தல் என இது போன்ற செயல்பாடுகளுக்கான ஒலியைத் தரும். இதில் சில உங்களுக்குச் சிரமமாக இருந்தால், அதனை நீக்கிவிடலாம்.
மாற்றத்தினை ஏற்படுத்த Win + I > Change PC Settings > General and customise the keyboard எனச் சென்று, தேவையான செட்டிங்ஸ் அமைக்கவும்.

ஹைபர்னேட்/ஸ்லீப்: கம்ப்யூட்டரை நாம் இயக்காமல் வைத்திருக்க விரும்பினால், அதனை Hibernate அல்லது Sleep மோடில் அமைத்து வந்தோம். ஷட் டவுண் டயலாக் பாக்ஸில் இது கிடைக்கும். விண்டோஸ் 8 ஷட் டவுண் டயலாக் பாக்ஸில் இதனை நாம் காண முடியாது. ஆனால், இது உங்களுக்குத் தேவை எனில், இவற்றைக் கொண்டு வரலாம். இதற்கென, Control Panel Power Options (powercfg.cpl) புரோகிராமினை இயக்கவும். இதன் இடது பிரிவில், ‘Choose what the power buttons do’ என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு ‘Change settings that are currently unavailable’ என்று ஒரு லிங்க் கிடைத்தால், அதில் கிளிக் செய்திடவும். விண்டோஸ் 8 சிஸ்டம், உங்கள் கம்ப்யூட்டர் Hibernate மற்றும் Sleep ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறதா எனக் கண்டறிந்து, அவற்றைக் காட்டும். இவற்றில் எதனை எல்லாம் பயன்படுத்த விரும்புகிறீர்களோ, அவற்றின் செக் பாக்ஸில், டிக் அடையாளம் ஏற்படுத்தி, மாற்றங்களை சேவ் செய்து வெளியேறவும். இனி, ஷட் டவுண் டயலாக் பாக்ஸில், இந்த ஆப்ஷன்கள் காட்டப்படும்.

இரண்டு அப்ளிகேஷன்கள் ஒரே நேரத்தில்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இயக்கப்படும் அப்ளிகேஷன்களை “immersive” அப்ளிகேஷன் என அழைக்கின்றனர். மானிட்டரின் திரை முழுவதும் காட்டப்படும் விதத்தினையே இது குறிக்கிறது. ஆனால், ஒரே நேரத்தில் இரண்டு அப்ளிகேஷனத் திரையில் பார்க்கவும் வழி உள்ளது. திரையின் இடது புறமாக ஸ்வைப் செய்தால், இறுதியாக நீங்கள் பயன்படுத்திய அப்ளிகேஷன், சிறிய தம்ப்நெயில் போலக் காட்சி அளிக்கும். நடப்பில் இயக்கப்படும் 

அப்ளிகேஷன் திரையின் மற்ற இடத்தை எடுத்துக் கொள்ளும். இந்த அப்ளிகேஷன்களை மாற்றி மாற்றி ஸ்வாப் செய்து முழுத் திரைக்குக் கொண்டு வந்து இயக்கத்தினைப் பெறலாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget