கைரேகை பொது ஜோதிட பலன்கள்

கைரேகை பலன்கள்பொதுவாக கைரேகை பலன் அறிய ஆண்களுக்கு வலக் கை ரேகையையும் பெண்களுக்கு இடக் கை ரேகையையும் பார்க்க வேண்டும் என கைரேகை நிபுணர்கள் கூறி வருகின்றனர் என்பது யாவரும் அறிந்ததே! ஆனால் எமது ஆய்வின்படி, இரண்டு கைகளின் ரேகையையும் பார்த்துத்தான் துல்லியமாக பதில் கூற முடியும். ஆண்களுக்கு இடக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும், வலக் கை
ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப் போகிற பலன்களையும் கூற வேண்டும். அதுபோல் பெண்களுக்கு வலக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும், இடக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப் போகிற பலன்களையும் கூற வேண்டும். ஓர் ஆடவரின் இடக் கையில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலவீனமாக இருக்க, அவரது வலக் கையில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலமாக இருந்தால், அவர் 40 வயது வரை பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து, அதற்கு பிறகு படிப்படியாக தனது வாழ்வில் போராடி வெற்றியடைந்து, நல்ல நிலைமையை அடைவார் எனக் கூற வேண்டும். இரண்டு கைகளில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலமாக இருந்தால் அந்த நபர் வாழ்நாள் முழுவதும் நல்ல சந்தோஷமான வாழ்க்கையைப் பெறுவார் என்பது எமது அனுபவத்தில் கண்ட உண்மையாகும். மிகவும் துல்லியமாக ஆராய்ந்து பார்த்தால், ஆண்களுக்கு வலக் கை ரேகை சிறப்பாக இருக்க, இடக்கை ரேகை அம்சங்கள் பலவீனமாக இருந்தால் இவர்களுக்கு 2/3 பங்கு சுப பலனும் 1/3 பங்கு பாவ பலனும் உண்டாகும் என அறிய வேண்டும். இவ்வாறு பெண்களுக்கு இருந்தால் 1/3 பங்கு சுப பலனும் 2/3 பங்கு பாவ பலனும் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஆண்களுக்கு வலக் கை ரேகையையும், பெண்களுக்கு இடக் கை ரேகையையும் அதிக சக்தி வாய்ந்தது. 

விதி ரேகைஉள்ளங்கையில் மணிக்கட்டு பகுதியில் இருந்து ஒரு ரேகை சனி மேட்டை நோக்கிச் செல்லும். இதுவே விதி ரேகை ( அ) தொழில் ரேகை என்று அழைக்கப்படும். இந்த ரேகை நமது உழைப்புக்குத் தகுந்த பலனைக் கொடுக்கக் கூடியது எனலாம். சிலர் கைகளில் இந்த ரேகையே இருக்காது! இவர்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்டுப் பாடுபட்டாலும், அதற்குத் தகுந்த பலன் கிடைக்காது. விதி ரேகை தெளிவாக அமைந்து வெட்டுக்குறி, தீவு ஏதும் இல்லாது மணிக்கட்டிலிருந்து சனி மேடு வரை செல்வது நல்ல அமைப்பாகும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் தொழில் விஷயத்தில் பிரச்சனை ஏதும் இல்லாது நிம்மதியாக வாழ்வர். விதி ரேகையுடன் ஆயுள், புத்தி, இருதயரேகைகளும் நன்றாக அமைந்திருந்தால், இவர்களுக்கு நல்ல தேக ஆரோக்கியமும் , புத்திசாலித்தனமும் , நல்ல தொழில் விருத்தியும் ஏற்பட இடமுண்டு. இவர்களது எதிர்காலம் சந்தோசமாக அமையும்.

ஆயுள் ரேகை:ரேகைகளில் மிகவும் முக்கியமானது ஆயுள் ரேகையாகும். முதலில் இதன் தன்மையைக் கவனிக்க வேண்டும். இந்த ரேகை சிலரது கைகளில் தடிமனாகவும். ஆழமாகவும் பதிந்திருக்கும்; சிலரது கைகளில் லேசாகவும் மெல்லியதாகவும் பதிந்திருக்கும். தடிமனான ஆயுள் ரேகை மிருகபலத்தையும், மெல்லிய ஆயுள் ரேகை ஆத்ம பலத்தையும் குறிப்பிடும். தெளிவாகவும், மெல்லியதாகவும், நீளமாகவும் அமைந்த ஆயுள் ரேகை, ஒருவருக்கு நல்ல தேக பலத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும். தடிமனான ஆயுள் ரேகை உடையோர் அடிக்கடி சிறு, சிறு உடல் உபாதையால் சிரமப்படுவர். அடுத்து, ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஆராய வேண்டும், ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி நன்கு விலகியிருந்தால், இவர்களது தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆயுள் ரேகை, சுக்கிர மேட்டைச் சுற்றி நெருங்கிக் காணப்பட்டால், இவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் என்பதை இது குறிக்கும். ஆயுள் ரேகை குரு மேட்டுப் பக்கம் சற்று உயர்ந்து காணப்பட்டால், இவர்கள் தன்னடக்கம், கட்டுப்பாடு, லட்சிய உணர்வு, உயர்வெண்ணம் கொண்டவர்களாக இருப்பர். ஆயுள்ரேகை கீழ் செவ்வாய் மேட்டிலிருந்து ஆரம்பித்திருந்தால், இவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும், அடக்கமில்லாதவர்களாகவும், சண்டை சச்சரவுகளில் ஈடுபடக்கூடியவர்களாகவும் இருப்பர். ஆயுள் ரேகையிலிருந்து மேல் நோக்கி எழும் ரேகைகள் சிறியதாக இருந்தால், இவர்கள் நல்ல உழைப்பு, உற்சாகம், அதிர்ஷ்டம் உடையவர்களாக இருப்பர் என்பதைக் காட்டும்.

புத்தி ரேகை:குரு மேட்டின் அடிப்பகுதியில் ஆயுள் ரேகையை ஒட்டி ஆரம்பமாகி, உள்ளங்கையில் குறுக்காக செவ்வாய் மேடு (அ) சந்திர மேட்டை நோக்கிச் செல்லும் ரேகை புத்தி ரேகை என்று அழைக்கப்படும். இந்த ரேகை ஓரளவு அழுத்தமாகவும், தெளிவாகவும் , மெல்லியதாகவும் இருந்து தீவு, புள்ளி, உடைதல், போன்ற குறைபாடுகள் இல்லாது அமைவது நல்ல அமைப்பாகும். இவர்கள் புத்திசாலியாகவும் , அதிக ஞாபக சக்தி உடையவர்களாகவும், நேர்மையாகவும் இருப்பர். புத்தி ரேகை நீளமாக அமைந்திருந்தால், இன்னும் விசேஷமான பலனைத் தரும். புத்தி ரேகை நமது மூளையின் அமைப்பையும், அது வேலை செய்யும் திறனையும், நமது மனோநிலையையும் எடுத்துக் காட்டுகிறது! உள்ளங்கையில் காணப்படும் முக்கியமான ரேகைகளில் இதுவும் ஒன்றாகும். இனி, புத்தி ரேகையின் பலவிதமான அமைப்புகளையும், அவை தரும் பலாபலன்களையும் பற்றி விரிவாகக் காண்போம்.

ஆரோக்கிய ரேகை:ஆரோக்கிய ரேகையைப் புதன் ரேகை என்று கூறுவது உண்டு. இது விதி ரேகையின் அருகே ஆரம்பித்து புதன் மேடு வரை செல்லும். ஒருவரது உடல் நிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த ரேகை எடுத்துக் காட்டும். உள்ளங்கையில் உள்ள மற்ற ரேகைகளான புத்திரேகை, ஆயுள் ரேகை, இருதய ரேகை ஆகியவற்றில் ஏதாவது குறைபாடு இருந்தாலும், இந்தப் புதன் ரேகை நன்றாக அமைந்திருந்தால், இவர்களது தேகத்தில் ஏதாவது பீடைகள் வந்தாலும், அவையெல்லாம் உடனடியாக நிவர்த்தியாவதற்கு இது உறுதுணையாக இருக்கும். மேலும், புதன் மேடு பலவீனமாக இருக்க, இந்த ரேகை பலமாக இருந்தால் புதன் மேட்டால் ஏற்படும் குறைபாடுகள் யாவும் விலகி விடும். இந்த ரேகை தெளிவாகவும், மெல்லியதாகவும், ஓரளவு அழுத்தமாகவும் இருப்பது நல்லது. தீவு, பிளவு, வெட்டுக்குறி, சங்கிலிக் குறி போன்ற குறைபாடுகள் ஏதும் இல்லாது இந்த ரேகை அமைந்திந்தால் இவர்கள் நல்ல பேச்சு சாதூர்யம், சொல்வன்மை கலை ë£னம், வியாபரத்திறமை ஆகியவற்றுடன் பெரும் பணம் சம்பாதித்து சிறப்பாக வாழ்வர். 

இருதய ரேகை:உள்ளங்கையில் காணப்படும் முக்கியமான ரேகைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த ரேகை புதன் மேட்டில் உற்பத்தியாகிச் சூரிய மேடுகளைத் தாண்டி குரு மேட்டில் முடியும். சிலருக்கு இந்த இருதய ரேகை சனி மேட்டில் முடியும்; (அ) கிரக மேடுகளுக்கு வெகுவாக கீழே தள்ளிப் புத்திரேகையை ஒட்டியும் முடியலாம். சிலர் கைகளில் புத்தி ரேகை, இருதய ரேகை ஆகிய இரண்டும் சேர்ந்து, உள்ளங்கையில் குறுக்கே ஒரே ரேகையாகவும் காணப்படலாம். இந்த இருதய ரேகை மூலம் நமது இருதயம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதையும், இருதயத் துடிப்பு இரத்த ஓட்டம் போன்றவற்றையும் தெரிந்துகொள்ளலாம். அத்துடன் இருதயத்தில் ஏற்படக் கூடிய கோளாறுகளையும் தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த ரேகை மூலம் அன்பு, பாசம், தயை, காருண்யம், காதல் போன்ற உணர்வுகள் எந்த அளவில் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget