கர்ப்பிணிகள் மன அழுத்தத்தை தவிர்ப்பது எப்படி?

பிரசவகாலத்தில் செய்யப்படும் மசாஜ் மன அழுத்தத்தை குறைத்து தாயின் உடலுக்கு தேவையான சுகாதார நன்மைகளை அதிகரித்துக் கொள்ள சிறந்த வழியாக உள்ளது...கர்ப்பகாலத்தில் செய்யும் மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்க்கலாம். 

கர்ப்பகாலத்தில் கர்ப்பிணி பெண்கள் மசாஜ் செய்வதால் அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக உடல் உளைச்சல், கவலை, மன அழுத்தம் ஆகியவற்றை தீர்த்து சந்தோஷத்தை தரக்கூடியது.. மசாஜ் செய்வது பொதுவாக நன்மையளிக்ககூடியது. 

அதுவும் கர்ப்பகாலத்தில் செய்யப்படும் மசாஜ் தாய்க்கும், குழந்தைக்கும் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. கர்ப்ப கால மசாஜ் உடலியல் உணர்ச்சி மற்றும் மனரீதியான நன்மைகளை பரவலாக வழங்குகிறது. 

கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான உடல் உபாதைகளான தசை உபாதைகள், முதுகு வலி, மேல் முதுகு வலி, தசைவலி, கால்பிடிப்புகள், கால் வலி, பதற்றம், மற்றும் முடிச்சு, மணிக்கட்டு,  தலைவலி, நெஞ்செரிச்சல், சோர்வு, 

வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள், நாசி நெரிச்சல், மூச்சுதிணறல், வீக்கம், கீழ்முனைப்புள்ளிகள், கழுத்து வலி,  இடுப்பு மூட்டு வலி மற்றும் மலச்சிக்கள் போன்றவற்றிக்கு இந்த மசாஜ் உதவிபுரிகிறது.. ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தி மன அழுத்தம் மற்றும் கவலை போன்றவற்றிற்கு நிவாரணம் வழங்குகிறது. 

தாயின் உடலில் உள்ள எண்டோர்பின் வெளியிட்டு நரம்பு மண்டலத்தினை அமைதிபடுத்துகிறது. இதன் விளைவாக தாய் மிகவும் தளர்வாகவும் நிம்மதியாக தூங்கவும் வழிவகுக்கிறது. தாய் மற்றும் குழந்தைக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் சத்துகளை வழங்குகிறது. 

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கிறது. உடலில் ஏற்படும் மாற்றங்களான முதுகு வலி மற்றும் கை,கால் வலி போன்ற அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்கிறது. 

கால்களில் ஏற்படும் வீக்கம், கணுக்கால் வீக்கம் போன்றவற்றை குறைக்கிறது. தோல் நெகிழ்ச்சியை மேம்படுத்துகிறது. செரிமானத்தை அதிகப்படுத்தி நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. இடுப்புகளில் ஏற்படும் வலியை குறைக்கிறது. மசாஜ் செய்வது தாயையும், சேயையும் பாதுகாக்கிறது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget