தனிமையிலே இனிமை காண்பது எப்படி?

நம்மை சுற்றி நிறைய பேர் இருந்து கொண்டிருந்தாலும் நாம் ஏதோ தனிமையில் இருப்பதை போன்ற உணர்வு பலரையும் ஆட்கொள்ளத் தான் செய்கிறது. அதுவே திருமணமாகி, கணவரோடு புதுப்பெண் புதிய நகருக்கு வாழப்போனால், தனிமையில் தவித்துத்தான் போகிறார்கள். 

புதிய மனிதர்கள், புதிய மொழி, புதிய கலாசாரம் போன்றவைகள் எல்லாம் சேர்த்து அவர்களை
தவிக்கவைத்து, தனிமைப்படுத்துகிறது. இது பற்றிய மத்திய அரசின் ஆய்வறிக்கை ஒன்று ‘இந்தியாவில் 61 சதவீத நகர்ப்புற பெண்களும், 91 சதவீத கிராமப்புற பெண்களும் திருமணத்திற்கு பிறகு புதிய இடங்களுக்கு செல்கிறார்கள். 

அவர்கள் திக்குமுக்காடித்தான் தனிமை உணர்வை தவிர்க்கிறார்கள் என்கிறது.  எல்லா இடத்திலும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களோடு பழக மொழியைவிட அன்பு உள்ளங்கள்தான் அவசியம். ஒரு சிறிய புன்னகை கூட மற்றவர்களை ஈர்த்துவிடும்.

தனிமை எண்ணங்களை தவிர்த்துவிட்டு, மற்றவர்களோடு இன்ப, துன்பங்களை பகிர்ந்துகொள்ளும்போது அவர்களுடனான உறவு வலுப்பட்டு, தனிமை விரட்டப்பட்டுவிடும். அந்தந்த பகுதி மக்களின் கலாசாரத்தை புரிந்து கொண்டு அங்குள்ள மக்களின் பழக்க வழக்கங்களை தெரிந்து கொண்டு, அதற்கு தக்கபடி அவர்களோடு பழக முற்பட வேண்டும். 

தினமும் காலை, மாலை இரு நேரமும் அருகில் உள்ள இடங்களுக்கு சென்று சிறிது நேரம் உலாவிவிட்டு வர வேண்டும். அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் பார்வை நம் மீதுபடும். அதுவே அவர்களிடம் பழக வாய்ப்பாக அமையும். பெண்கள் எல்லோருமே படித்திருக்கவேண்டும். 

படித்திருந்தால் வாழப்போகும் ஊரில், வீட்டின் அருகில் உள்ள பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க தொடங்கிவிடலாம். அந்த பிள்ளைகள் மூலம் அவர்களது பெற்றோர் அறிமுகமும், டியூசன் டீச்சர், படித்த பெண் என்ற அங்கீகாரமும் கிடைக்கும். 

நேரம் கிடைக்காமல் விட்டுப்போன படிப்பை புதிய ஊருக்கு வந்ததும் தொடரலாம். இதனால் தனிமையை பயன்படுத்தி அறிவை வளர்த்துக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் புகைப்படம் சேகரிப்பு, சித்திரம் வரைதல், பெயிண்டிங் செய்தல் இப்படி ஏராளமான பொழுது போக்குகளில் எதையேனும் ஒன்றை ஆரம்பித்து தனிமையை விரட்டலாம். 

சுவையான உணவுகளை தயாரிக்க தெரிந்து வைத்திருந்தால், விழாக்காலங்களில் அவைகளை தயாரித்து, பக்கத்து வீடுகளில் உள்ளவர்களுக்கு கொடுத்து நட்பை வளர்க்கலாம். விருந்துக்கும், பூஜைகளுக்கும் அவர்களை அழைத்து மனதில் இடம்பெறலாம். 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget