விண்டோஸ் 8.1ம் கேள்வி களை கட்டும்

1. விண்டோஸ் 8.1 என்பது என்ன? 
விண்டோஸ் 8 சிஸ்டத்தின் அப்டேட் ஆக, விண்டோஸ் 8.1 , சென்ற ஜூன் 26,2013 அன்று வெளியிடப்பட்டது. இது விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு வெளியிடப்பட்டது. பொதுவாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரே, இது போன்ற முற்றிலும் மாறுபட்ட பதிப்பு வெளியிடப்படும். ஓராண்டிற்குள்ளாக வெளியிடப்பட்டது இதுவே முதல் முறை.

விண்டோஸ் 8.1 சிஸ்டத்தின் வெளியீட்டிற்கு முந்தைய பதிப்பிற்காகவே, தனியே ஓர் இணையதளம் (http://preview.windows.com/) இயங்குகிறது. இது குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்காகவும், தனியே ஒரு தளம் (http://windows.microsoft.com/enus/windows8/previewfaq) இயங்குகிறது. 

2. என்னவெல்லாம் புதியது? என்னவெல்லாம் மாற்றப்பட்டுள்ளன?
இது ஒரு சர்வீஸ் பேக் அல்ல. பல மாறுதல்களை இது கொண்டுள்ளது. ஒவ்வொன்றாகக் கூறப்போனால், பட்டியல் மிக அதிகமாக நீளும். இவற்றில் சில குறித்து ஏற்கனவே இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. மற்றவற்றை இதன் இணைய தளத்தில் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

3. என்னவெல்லாம் இல்லை?
ஆம், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இடம் பெற்ற சில வசதிகள், சிஸ்டம் 8.1ல் இல்லை. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 
3.1. ஒரே இமேஜாக, சிஸ்டம் அனைத்தையும் பேக் அப் காப்பி (Windows 7 Backup program) செய்திடும் வசதி இதில் இல்லை. இதற்கான எக்ஸிகியூட்டபிள் பைல் மற்றும் டி.எல்.எல். பைல் (Sdclt.exe and Sdcpl.dll) ஆகியவை நீக்கப்பட்டுள்ளன. 
3.2. System Properties டயலாக் பாக்ஸ் சென்றால், Windows Experience Index என்பது இப்போது இல்லாததைக் காணலாம்.
3.3. Mail, People and Calendar ஆகியவற்றுடன் கிடைத்த Messaging அப்ளிகேஷன் தரப்படவில்லை. 

4. விண்டோஸ் 8.1 இன்ஸ்டால் செய்திட, சிஸ்டம் தேவை எவை?
விண்டோஸ் 8 சிஸ்டத்தினை இயக்கிய எந்த சிஸ்டமும், விண்டோஸ் 8.1. பிரிவியூ சிஸ்டத்தினை இயக்கும். உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் குறைந்தது 10 ஜிபி இடம் காலியாக இருக்க வேண்டும். 

5. தமிழில் இந்த விண்டோஸ் 8.1 பதிப்பு கிடைக்குமா?
இல்லை. சீனம் மற்றும் அரபிக் உட்பட 14 மொழிகளில் இந்த சிஸ்டம் உள்ளது. இன்ஸ்டால் செய்த பின்னர், வேறு மொழிகளுக்கான வசதி தரப்படும்.

6. விண்டோஸ் 8.1 இன்ஸ்டால் ஆன பின்னர், அதனை நீக்க முடியுமா?
இதனை அன் இன்ஸ்டால் செய்திட முடியாது. ஹார்ட் டிஸ்க்கினை முழுமையாக பார்மட் செய்து, பழைய சிஸ்டத்தின் பேக் அப் காப்பி இருந்தால், அதனை இன்ஸ்டால் செய்திட வேண்டும்.

7. விண்டோஸ் 8.1 பிரிவியூ இன்ஸ்டால் செய்தால், அதிலிருந்து நேரடியாக, இறுதியாக வெளிப்படும் சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்திட முடியுமா?
அநேகமாக முடியாது என்றே நினைக்கிறேன். மைக்ரோசாப்ட் இது குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. எனவே, புதிய ரீ இன்ஸ்டலேஷன் தேவைப்படலாம் என்று இப்போதைக்கு முடிவு செய்து கொள்ளலாம்.

8. விண்டோஸ் 8.1 பிரிவியூ சிஸ்டம் இன்ஸ்டால் செய்த பின்னர், மீடியா சென்டர் தொடர்ந்து கிடைக்குமா?
ஏற்கனவே, உங்கள் சிஸ்டத்தில், மீடியா சென்டர் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால், நிச்சயம் விண்டோஸ் 8.1 இன்ஸ்டால் செய்த பின்னரும் கிடைக்கும். ஆனால். ஐ.எஸ்.ஓ. பைல் மூலம், விண்டோஸ் 8.1 இன்ஸ்டால் செய்தால் , மீண்டும் மீடியா பேக் பதிவு செய்த குறியீட்டினைக் கொண்டு இன்ஸ்டால் செய்திட வேண்டும்.

9. விண்டோஸ் 8.1 முழுமையான சிஸ்டத்தினை எப்படி இன்ஸ்டால் செய்திடலாம்?
விண்டோஸ் ஸ்டோர் வழியே இன்ஸ்டால் செய்வதுதான் நல்லது. உங்களிடம் இருக்கும் விண்டோஸ் 8 சிஸ்டம் எந்த வகையைச் சேர்ந்தது எனக் கேட்டு, அதற்கான சரியான விண்டோஸ் 8.1 சிஸ்டம் வகையை, மைக்ரோசாப்ட் வழங்கும். அதற்கு முன்னர், உங்களின் விண்டோஸ் 8 உரிமம் சார்ந்த தகவல்கள் சரி பார்க்கப்படும்.

10. விண்டோஸ் 8.1 டெஸ்க்டாப் பயனாளர்கள், எந்த வகையான, தங்களுக்கு தேவையான மாறுதல்களை மேற்கொள்ளலாம்?
ஸ்டார்ட் ஸ்கிரீன் செல்லாமல், நேரடியாக டெஸ்க்டாப்பிற்கு பூட் ஆகும் வகையில் ஆப்ஷன் செட் செய்திடலாம். மேல் இடது மற்றும் வலது மூலைகளைத் தொட்டு இயக்கும் நிலையை, இயங்கா வண்ணம் செய்திடலாம். ஸ்டார்ட் ஸ்கிரீனை, டெஸ்க்டாப் ஸ்கிரீன் போல செட் செய்திடலாம். ஸ்டார்ட் ஸ்கிரீனின் மாறா நிலைத் தோற்றத்தில், அனைத்து அப்ளிகேஷன்களும் காட்டும் மெனுவினைக் கொண்டு வரலாம்.

11. விர்ச்சுவர் மெஷின் ஒன்றில், விண்டோஸ் 8.1 அப்டேட் இன்ஸ்டால் செய்திட முடியுமா?
நீங்கள் பயன்படுத்தும் விர்ச்சுவலைசேஷன் சாப்ட்வேர் எதனை எல்லாம் அனுமதிக்கும் என்று தெரிந்த பின்னரே, இதற்கு பதில் சொல்ல இயலும். அல்லது அந்த சாப்ட்வேர் புரோகிராம் இதற்கான முடிவினை, நீங்கள் இன்ஸ்டால் செய்திடுகையில் தெரிவிக்கும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget