ரயில் சண்டையில் தத்ருபமாக நடித்த அஜித்

தமிழ்நாட்டில் பொது இடங்களில் கேமரா வைத்தால் தமிழக அரசு கட்டணம் என்ற சட்டியில் தயாரிப்பாளர்களை வறுத்து எடுத்துவிடும். அதற்கு பயந்து ஹைதராபாத், மும்பை என்று ஓடிவிடுகிறார்கள்.

விமான நிலையம், ரயல் நிலையங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கு தலைகீழாக நிற்க வேண்டும். வடஇந்தியாவில் டிக்கெட் வாங்காமல் பயணம்
செய்தாலும் ரயில்வே கண்டு கொள்வதில்லை. 

அதே ரயில்வே, தமிழகத்தில் ஐடி கார்ட் ஒரிஜினலுக்கு பதில் ஜெராக்ஸ் எடுத்து வந்தாலே ஃபைன் அது இதுவென்று எகிறி குதிக்கும். தமிழகர்கள் என்றால் இளிச்சவாயர்கள் என்று நினைக்கிறார்கள்.

போகட்டும்....

சினிமாதுறைக்கும் இதே கெடுபிடிதான். ரயில் சம்பந்தப்பட்ட காட்சிகளை தமிழகத்தில் எடுக்க அனுமதி கிடைப்பதில்லை.

அப்படியே கிடைத்தாலும் ஒரு முழு ரயிலுக்கான பணத்தை டெபாசிட்டாக கட்ட வேண்டும். நிமிடக் கணக்கில்தான் அனுமதி. அதுக்கு கதையே மாற்றலாம் என்று கதறி ஓடுகிறவர்கள்தான் அதிகம். அஜித் படத்துக்கு அப்படியெல்லாம் ஓட முடியாதே.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் ரயில் சண்டை ஒன்று பிரதானமாக வருகிறது. அந்தச் சண்டைக் காட்சியை எடுக்க ஒரிசா செல்கிறார்கள். அந்த சண்டைக் காட்சியில் அஜித்தின் சகோதரர்களாக வரும் விதார்த், பாலா உள்ளிட்ட நால்வரும் நடிக்கிறார்கள். அவர்கள் மோதுவது வில்லனாக நடிக்கும் பரேஷ் ராவலுடன்.

தமன்னா ஹீரோயினாக நடித்து வரும் இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget