இயக்குனர் ராம் இயக்கி, நடித்துள்ள படம் தங்கமீன்கள். அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களே கதையின் முக்கிய கருவாகும். ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவின் உணர்வை சொல்லும் படம் தங்க மீன்கள். ராமின் குடும்பத்தினர் கோவையில் உள்ளனர். அவரது தந்தை தலைமை ஆசிரியராக இருந்தவர். அந்த பாதிப்பில் படத்தில் பூ ராமசாமியை பயன்படுத்தி உள்ளார். அவரது மகள் தொலைபேசியில் பேசும் பேச்சு, அவர் கேட்கும் பொருள்கள், அந்த பாசம், பிரிவு அத்தனையையும் காட்சியாக்கி சில இடங்களில் கண் கலங்க வைத்துள்ளார் ராம். தங்க மீன்கள் படத்தில் செல்லம்மாவாக நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் சாதனா, படு சுட்டி பெண்ணாக வருகிறார். இந்த படத்தில் அவரின் குடும்பமே நடித்துள்ளனர்.