எக்ஸெல் ஒர்க் ஷீட்டின் டேப்கள் அனைத்தும் சிறியதாகவே தரப்பட்டுள்ளன. மாறா நிலையில் தரப்படும் இவற்றின் பரிமாணத்தை நாம் மாற்றலாம்.
நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் 7 எனில், கீழ்க்கண்டபடி செயல்படவும்.
1. Start மெனுவில் இருந்து Control Panel திறக்கவும். 2.அடுத்து Appearance & Personalization என்பதில் கிளிக்
செய்திடவும். 3. Personalization பிரிவில் Change Window Glass Color என்பதில் கிளிக் செய்திடவும். 4. அடுத்து Advanced Appearance Settings என்பதில் கிளிக் செய்திடவும். 5. அடுத்து Item என்ற ட்ராப் டவுண் பாக்ஸில், Scrollbar என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, நீங்கள் விரும்பும் அளவில் டேப் அமைய, அதற்கான அளவுகளைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். பெரிய அளவில் என்றால், டேப்களும் பெரியதாக அமையும். பின்னர் Apply மற்றும் OK கிளிக் செய்து வெளியேறவும்.
இப்போது எக்ஸெல் ஒர்க்ஷீட் டேப்களின் அளவு நீங்கள் செட் செய்தபடி அமையும். இதில் என்ன பிரச்னை என்றால், உங்கள் ஆபீஸ் தொகுப்பில் உள்ள புரோகிராம்களில் தரப்பட்டுள்ள ஸ்குரோல் பார்களின் அளவும் மாற்றப்பட்டிருக்கும். சற்று பெரியதாக உள்ள ஸ்குரோல்பாரினை நீங்கள் பயன்படுத்தப் பழக வேண்டியதிருக்கும்.
நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் எக்ஸ்பி எனில், கீழ்க்கண்டவாறு செயல்படவும்.
1. Start மெனுவில் இருந்து Control Panel திறக்கவும்.
2. இதில் Display என்பதில் டபுள் கிளிக் செய்திடவும்.
3. இங்கு Appearance என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.
4. பின்னர், கீழாக வலது புறம் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
5. அடுத்து Item என்ற ட்ராப் டவுண் பாக்ஸில், Scrollbar என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, நீங்கள் விரும்பும் அளவில் டேப் அமைய, அதற்கான அளவுகளைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். பெரிய அளவில் என்றால், டேப்களும் பெரியதாக அமையும். பின்னர் Apply மற்றும் OK கிளிக் செய்து வெளியேறவும்.
எந்த செல்லில் கர்சர் உள்ளது?: எக்ஸெல் ஒர்க் புக் ஒன்று மிகப் பெரியதாக இருந்தால், சில வேளைகளில் அதன் அடுத்த அடுத்த செல்களுக்கு, மானிட்டர் திரை அளவைத் தாண்டிச் செல்ல வேண்டியதிருக்கும். அப்போது எந்த செல்லில் நாம் கர்சரை வைத்துச் செயல்பட்டுக் கொண்டிருந்தோம் என்பது மறந்து போகும். கர்சர் அங்கு துடித்துக் கொண்டிருந்தாலும், திரை மேலும் கீழுமாகச் சென்றதால், எங்கு செயல்படும் அந்த செல் உள்ளது என்று அறியாமல், ஸ்குரோலிங் பார் அல்லது அம்புக் குறி கீகளை அழுத்தியவாறு தேடுவோம்.
இந்த பிரச்னைக்கு ஒரு சிறிய தீர்வு வழி ஒன்று உள்ளது. ஒன்றல்ல, இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழி சற்று சுற்றுவழி. உங்களுக்கு நீங்கள் இருந்த செல் அட்ரஸ் அல்லது அதன் பெயர் தெரிந்திருக்க வேண்டும். தெரிந்திருந்தால், [Ctrl]+G கீகளை அழுத்தி, பின்னர் செல் எண் அல்லது பெயர் டைப் செய்து என்டர் அழுத்த, அந்த செல் உங்களுக்குக் கிடைக்கும். ஆனால், நாம் பெரும்பாலும், செல்லின் எண் அல்லது பெயரை நினைவில் வைத்திருக்க மாட்டோம். அந்த சூழ்நிலையில், கண்ட்ரோல்+ பேக் ஸ்பேஸ் அழுத்துங்கள். ஜில் என்று, நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த செல்லுக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.
இதனைச் செயல்படுத்த, நீங்கள் கர்சரை வைத்திருக்கும் செல், மானிட்டர் திரையில் இருக்கக் கூடாது. அப்போதுதான், அந்த செல் கிடைக்கும்படி, மானிட்டரில் திரைக் காட்சி மாற்றப்படும். கர்சர் இருக்கும் செல், மானிட்டர் திரையில் இருந்தால், நீங்கள் கண்ட்ரோல் மற்றும் பேக் ஸ்பேஸ் அழுத்துகையில், திரைக் காட்சி அப்படியே தான் இருக்கும். ஏனென்றால், அந்த செல் தான் உங்கள் முன் காட்டப்படுகிறதே.
எனவே இந்தக் கட்டளையினை சோதித்துப் பார்க்க விரும்பினால், செல் ஒன்றில் கர்சரை வைத்துவிட்டு, பின் ஸ்குரோல் பார் மூலம் அல்லது வேறு வழிகளில் சற்றுக் கீழாகச் செல்லுங்கள். அதன் பின் இந்தக் கட்டளை கொடுத்துப் பாருங்கள்.