கோவையின் மருத்துவக் குணம்

  • 1. மூலிகையின் பெயர் :- கோவை.
2. தாவரப்பெயர் :- COCCINIA INDICA.
3. தாவரக் குடும்பம் :- CUCURBITACEAE.
4. பயன் தரும் பாகங்கள் :- இலை, காய் மற்றும் கிழங்கு.
5. வளரியல்பு :- கோவைக் கொடி நன்கு படர்ந்து வளரக் கூடிய கொடி இனத்தைச் சேர்ந்தது. இது சாதாரணமாக வேலிகளிலும், குத்துச்செடி, மரங்களிலும் படர்ந்து தமிழகமெங்கும் வளரக்கூடியது. இதன் இலைகள் ஐந்து கோணங்களையுடைய மடலான காம்புடையது. மலர்கள் வெள்ளையாகவும், நீண்ட முட்டை வடிவ வரியுள்ள காய்களையும், பழங்கள் செந்நிரமாக இருக்கும். பெண்களின் உதடுகளை இந்தப் பழத்திற்கு ஒப்பிடுவர் புலவர்கள். வேர் கிழங்காக வளரும்.
6. மருத்துவப்பயன்கள் :- கோவை சிறுநீர், வியர்வை ஆகியவற்றை மகுதிப்படுத்தும் குணமுடையது. வாந்தியை உண்டாக்கும் தன்மையுடையது. இரத்த சர்கரையை (Blood sugar) குணப்படுத்த வல்லது.
கோவையின் ஒரு பிடி இலையை 200 மி.லி. நீரில் சிதைத்துப் போட்டு 100 மி.லி. யாகக் காச்சிக் காலை மாலை குடித்து வர உடல் சூடு, கண்ணெரிச்சல், இருமல், நீரடைப்பு, சொறிசிரங்கு, புண் ஆகியவை போகும்.
இதன் இலைசாறு 30 மி.லி. காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர மருந்து வேகம் தணியும்.
கோவைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணைய் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தலை முழுகி வரச் சொறி, சிரங்கு, படை, கரப்பான் ஆகியவை தீரும்.
கோவையின் பச்சைக் காய் இரண்டை தீனமும் சாப்பிட்டு வர மதுமேகத்தைக் தடுக்கலாம்.
கோவைக் கிழங்குச் சாறு 10 மி.லி. காலை மட்டும் குடித்து வர இரைப்பிருமல் (ஆஸ்துமா) இரைப்பு, கபரோகம், மார்புச்சளி, மதுமேகம், கண்டமாலை, வீக்கம் ஆகியவை தீரும்.
கோவைக்காயை துண்டு துண்டாக வெட்டி, வெய்யிலில் நன்கு காயவைத்துப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி வீதம் மூன்று வேளை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை நோய் குணமாகும். பச்சைக் காயை வாரம் இருமுறை பொறியல் செய்தும் சாப்பிடலாம்

பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget