துவரம்பருப்பு இல்லாமல் சூப்பர் குழம்புகள்


தேங்காய் அரைத்த குழம்பு
வெண்டை, பூசணி, சௌசௌ, முருங்கைக்காய் இவற்றுள் ஏ தேனும் ஒன்றை உபயோகிக்கலாம். காய் துண்டுகளை புளியில் வேக வைத்து கெள்ளவும், சிவப்பு மிளகாய், உளுத்தம் பருப்பு, வெந்தயம் இவற்றை சிவக்க வறுத்து, தேங்காயுடன் சேர்த்து அரைத்து வெந்த காயுடன் கலக்கவும், கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். (குழம்பை மிக அதிகமாக கொதிக்க வைக்க வேண்டாம்)

புளிசேரி
தேங்காயுடன் பச்சைமிளகாய், சிறு துண்டு, இஞ்சி, சீரகம் சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து புளித்த மோரில் கலக்கவும். பூசணி அல்லது வெண்டைக்காய்த் துண்டுகளை உப்பு சேர்த்து வேக வைத்து, ஆறிய பின் அரைத்து விழுதைக் கலக்கவும். சாப்பிடுவதற்கு சற்று முன்பாக, குறைந்த சூட்டில் பொங்கும் வரை வைத்து இறக்கவும், (கொதிக்க வைத்தால் மோர் பிரிந்து விடும்)
குறிப்பு: இஞ்சி சேர்த்தும், சேர்க்காமலும் செய்யலாம். சளி, ஜுரம் உள்ள போது தயிர் சேர்க்க கூடாது. சாததத்தில் புளிசேரியை சேர்த்து சாப்பிடலாம்.
புளிக்குழம்பு
பூசணி அல்து பரங்கித் துண்டுகளை உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும். சாம்பார் பொடியை சேர்த்து நன்கு கொதித்த பின் பொரி கடலைமாவு சற்று நீரில் கரைத்து, குழம்புடன் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும். கறிவேப்பிலை அல்லது கொத்துமல்லி சேர்க்கவும். கடுகு தாளிக்கவும்.


கதம்ப குழம்பு
ஒரு டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் தனியா, ஒரு டீஸ்பூன் மிளகு, சீரகம், வெந்தயம், சுக்குப்பொடி, கடுகு, இவற்றை வாணலியில் வறுத்து கொள்ளவும். எல்லாவற்றையும் மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, ஆறு பூண்டு பற்கள் ஆகியவற்றை கடுகு தாளிப்பு செய்து வதக்கி கொள்ளவும். புளிக்கரைசலில் காரப்பொடி, மஞ்சள் தூ, உப்பு சேர்தது வதக்கியவற்றை போட்டு குழம்பை கொதிக்கவிடவும். நன்றாக கொதித்தவுடன் பொடி செய்ததை போட்டு கறிவேப்பிலை சேர்த்து திக்காக இறக்கவும். சுவையான கதம்ப குழம்பு ரெடி. தோசைக்கும், சாதத்துக்கும் தொட்டு கொள்ள ஏற்றது. தயிர் சாதத்துக்கும் சூப்பராக இருக்கும்

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget