4 ஆண்டுகளுக்கு முன் நாசா அனுப்பிய விண்கலம் புதன் கிரகத்தை சென்றடைந்தது.



அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மைய விஞ்ஞானிகள் புதன்கிரகம் குறித்து ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர். இதற்காக மெசஞ்சர் என்ற விண்கலத்தை வடிவமைத்தனர். இந்த விண்கலம் கடந்த 2004-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது.

அது சுமார் 490 கோடி மைல் தூரம் பயணம் செய்துள்ளது. இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இரவு 9 மணி அளவில் புதன் கிரகத்தின் சுற்றுப்பாதையை சென்றடைந்தது. இதை தொடர்ந்து மெசஞ்சர் விண்கலத்தின் செயல்பாடு
தொடங்கப்பட உள்ளது.

சூரிய குடும்பத்தில் புதன் கிரகம் மிகவும் உள்ளடங்கி உள்ளது. மிகவும் வெப்பமான இந்த கிரகத்தில் ஆய்வு நடத்த மெசஞ்சர் விண்கலத்துடன் 7 கருவிகளையும் நாசா விஞ்ஞானிகள் அனுப்பி யுள்ளனர்.

இந்த கருவிகள் மூலம் வருகிற 23-ந்தேதி ஆய்வை தொடங்க உள்ளனர். அன்று அந்த கருவிகளின் செயல்பாடு பரிசோதிக்கப்படும். ஏப்ரல் 4-ந்தேதி முதல் கருவிகள் செயல்படுத்தப்படும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget