இந்த ஆண்டு முதல் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறைக்குள் பெல்ட் அணிந்து செல்லக் கூடாது என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவி்ததுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் 8ம் தேதி துவங்குகிறது. இந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுவையில் சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வின்போது முறைகேடுகள் நடக்காமல்
இருக்க மாநிலம் முழுவதும் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சில குறிப்பிட்ட தேர்வு மையங்களில் நிரந்தர பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. சில பள்ளிகளில் மாணவர்கள் தேர்வு அறைக்குள் புத்தகத்தை எடுத்துச் செல்வதாக புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து அந்த பள்ளிகளில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவி்த்தனர்.
தேர்வு அறைக்குள் மாணவர்கள் பெல்ட் அணிந்து வரக் கூடாது. மேலும் செல்போன், துண்டு பிரசுரம் ஆகியவற்றை எடுத்து வரக் கூடாது. இது தவிர ஷூ மற்றும் புத்தகத்தை அறைக்குள் எடுத்து வரக் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.