BSNL டேப்லட்டுக்கு 1 லட்சம் ஆர்டர்கள் குவிந்தது!


தொலைபேசி மற்றும் ஆன்லைன் மூலமாக 1 லட்சம் ப்ரீ ஆடர்களை பெற்றுள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 3 புதிய குறைந்த விலை டேப்லட்கள். புதிய தொழில் நுட்பம் கொண்ட ஆயிரம் ஆயிரம் டேப்லட்கள் இப்போது விற்பனை சந்தையில் இடம் பெற்று வருகிறது. இதில் 3 புதிய குறைந்த விலை கொண்ட டேப்லட்களை வெளியிட்டு உள்ளது பிஎஸ்என்எல் தொலை தொடர்பு நிறுவனம்.

இதை தொடர்ந்து குறைந்த விலை கொண்ட இந்த 3 புதிய டேப்லட்களும் 1 லட்சம் ப்ரீ ஆடர்களை பெற்று இருப்பதாக பேன்ட்டல் டெக்னாலஜியின் மேனேஜிங் டைரக்டரான வீரேந்திர சிங் கூறியுள்ளார்.
உயர்ந்த தொழில் நுட்பமாக இருக்க வேண்டும் அதே சமயம் குறைந்த விலை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர் பார்க்கின்றனர். இதை மனதில் கொண்டு பல நிறுவனங்கள் இதற்கு தகுந்த வகையில் தொழில் நுட்பங்களை உருவாக்கி வருகின்றனர்.
பென்ட்டா ஐஎஸ்-701-ஆர் டேப்லட் ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. தகவல்களை தெளிவாக காண இதில் 7 இஞ்ச் திரையையும் இந்த டேப்லட் வழங்கும். 3,000 எம்ஏஎச் பேட்டரியினை பெற்றுள்ள இந்த டேப்லட் விஜிஏ முகப்பு கேமராவினையும்
கொடுக்கும்.
பென்ட்டா டிபேட்_டபிள்யூஎஸ்-704-சி டேப்லட்டும் 7 இஞ்ச் திரை வசதியினை வழங்கும். இதன் மூலம் 3ஜி நெட்வொர்க் வசதியினையும் பெறலாம். மூன்றாவது டேப்லட்டான பென்ட்டா டிபேட் டபிள்யூஎஸ்-802-சி டேப்லட் 8 இஞ்ச் திரையை கொண்டுள்ளது. மற்ற 2 டேப்லட்களையும்விட இந்த டேப்லட் சற்று அதிகமான திரை வசதியை
கொடுக்கும். இதில் 2 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த 3 புதிய டேப்லட்களும் மார்ச் 1-ஆம் தேதியில் இருந்து டேப்லட் மார்கெட்களில் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த டேப்லட்கள் ரூ.3,499 விலையில் இருந்து ரூ12,500 விலை வரையில் கிடைக்கும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget