இந்திய பாரதீய ஜனதா கட்சி புதிய இன்டர்நெட் டிவி சேனலை உருவாக்கி உள்ளது. நாளுக்கு நாள் தொழில் நுட்பங்கள் புதிய வசதிகளுடன் விஷ்வ ரூபம் எடுத்து வருகிறது. அரசியல், பொருளாதாரம் போன்ற விஷயங்களை பற்றி அதிக ஆர்வம் கொண்டவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பை கொடுத்துள்ளது பாரதீய ஜனதா கட்சி.
ஆம்! ‘யுவா’ என்ற புதிய இன்டர்நெட் டிவி சேனலை ஆரம்பித்து உள்ளது பாரதீய ஜனதா கட்சி.
www.yuva4india.tv என்ற இணையதளத்தின் மூலம் இந்த இன்டர்நெட் டிவி சேனலை உருவாக்கி இருக்கும் பாரதீய ஜனதா கட்சி இதில் பலவிதமான நிகழ்ச்சிகளை வழங்க உள்ளது.
அரசியல் பற்றி தெரிந்து கொள்ளவும், அது சம்மந்தமாக பல தகவல்களை சேகரிக்கவும் அதிக ஆர்வம் கொண்டு இருப்பவர்களுக்கும் இந்த இன்டர்நெட் டிவி சேனல் அதிக தகவல்களை வழங்கும். அரசியல் பற்றி மட்டும் அல்லாமல் இதில் பொருளாதாரம், கரன்ட் அஃபேர்ஸ் போன்றவற்றை பற்றிய தகவல்களையும் இதில் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் இந்த இன்டர்நெட் சேனல் மாலை 5 மணி முதல் 7 மணி வரை நிகழ்ச்சிகளை வழங்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த சேனல் இன்றைய இந்திய இளைஞர்களுக்கு நாட்டுநடப்பு பற்றி மிக உபயோகமான தகவல்களை வழங்கும்